சோல்பிடெம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இன்றைய பதிவில் சோல்பிடெம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கையால் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பலவகையான உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் அதனை சரிசெய்ய உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இப்பொழுது நமக்கு திடீரென்று உடல்நல குறைபாடு ஏற்படுகிறது நம்மால் மருத்துவரிடமும் செல்ல முடியாத சூழல். இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் வாங்கி உட்கொள்ளும் மருந்து உங்களின் உடல்நல குறைபாட்டுக்கு ஏற்ற மருந்துதான இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்.
மேலும், சோல்பிடெம் மாத்திரை என்பது பெரியவர்களுக்கு தூக்கமின்மையை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். இது தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் தூங்க முடியும். சோல்பிடெம் மருந்து தூக்கத்தை தூண்டும் மருந்து ஆகும். இந்த மயக்க மருந்து ஹிப்னாடிக் மருந்து வகையை சேர்ந்தது. அந்த வகையில் இன்றைய பதிவில் சோல்பிடெம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம் வாங்க…
சோல்பிடெம் மாத்திரை என்றால் என்ன?

சோல்பிடெம் மாத்திரை என்பது தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மயக்க ஹிப்னாடிக் மருந்து ஆகும். இது நீண்ட நேரம் தூக்கம் ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது. உடலில் தூக்க சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது. இது வாய்வழி மாத்திரையாகவும், சப்லிங்குவள் மாத்திரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் ஓய்வு மேம்படும். தூக்கமின்மை பிரச்சனைக்கு குறுகியகால தீர்வாக உள்ளது.
சோல்பிடெம் மாத்திரை பயன்கள் :
- தூக்குவதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது தூங்கி கொண்டிருக்கும்போது அடிக்கடி எழுந்திரிப்பது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த மருந்து ஒரு தீர்வாக உள்ளது.
- சோல்பிடெம் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் விரைவான தூக்கத்தை ஏற்படுத்த கூடும்.
- தூக்கமின்மையால் ஏற்படும் தலைவலி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
- இந்த மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இரவில் விழித்திருப்பதை குறைத்து, தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் தூக்கமின்மையால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவற்றை சரி செய்கிறது.
- சோல்பிடெம் மாத்திரை குறுகியகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மருந்தாகும்.
சோல்பிடெம் மாத்திரை பக்க விளைவுகள்:
சோல்பிடெம் மாத்திரை சிலருக்கு தலைசுற்றல், தலைவலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
- ஒவ்வாமை பிரச்சனை
- தலைவலி
- தலைசுற்றல்
- வாய்ப்புபுண்
- வயிற்றுப்போக்கு
- தசைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கோடும்.
Amoxicillin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
சோல்பிடெம் மாத்திரை யார் பயன்படுத்த கூடாது?
- கர்ப்பிணி பெண்கள்
- பாலூட்டும் தாய்மார்கள்
- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
- போதை பொருள் மற்றும் மது பழக்கம் உள்ளவர்கள்
- கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள்
- மூச்சி திணறல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தகூடாது.
முக்கிய குறிப்பு:
சோல்பிடெம் மாத்திரை பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் மட்டுமே இந்த மாத்திரை பயன்படுத்த வேண்டும்.
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














