ஜியோ 5ஜி போன் விலை | Jio 5G Phone Price
இன்றைய ஸ்மார்ட் உலகில் பலவகையான ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அந்த வகையில் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் முதல் 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது என தகவகள் வெளியாகியுள்ளது. Reliance Jio 5G Phone குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும். ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தின் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இந்த பதிவில் ஜியோ 5ஜி போன் விலை தோராயிரமாக எவ்வளவு இருக்கும் மற்றும் சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
தோராயிரமாக விலை எவ்வளவு இருக்கு?
செப்டம்பர் மாதம் முதல் அல்லது தீபாவளி முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த 5ஜி போனை அறிமுகம் செய்யலாம். தோராயிரமாக இந்த விலை எவ்வளவு இருக்கும் என்றால் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அப்படி 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டால் அதுதான் இந்திய மொபைல் போன் நிறுவனங்களின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும்.
ஜியோ 5ஜி போன் சிறப்பம்சங்கள்:
ஜியோ 5ஜி போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC, 4ஜிபி ராம், 32 ஜிபி உட்புற சேமிப்பு உள்ளிட்டவை கிடைக்கும். 6.5 இஞ்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 13 மெகா பிக்சல் பின் புற கேமரா, 8 மெகா பிக்சல் முன் புற கேமரா, பிரகத்தி ஓஎஸ் (கூகுளுடன் இணைத்துத் தயாரிக்கப்பட்டது) உடன் இந்த போன் வரும் என கூறப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 4ஜி மொபைல் விலை பற்றி தெரிந்துகொள்வோமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |