சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை வணக்கம் கூறி வழிபடும் முறை ஆகும். சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 நிலைகளை உள்ளடக்கிய உடற்பயிற்சி ஆகும். சூர்ய நமஸ்காரம் என்ற பெயர் சமசுகிருத வார்த்தையிலிருந்து வந்ததாகும். சூரிய தேவனை வணங்கும் விதமாக சூரிய நமஸ்காரம் கொண்டுவரப்பட்டது.
சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவருந்தும் 2 மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும். மேலும், சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். முக்கியமாக, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.
சூரிய நமஸ்காரம் 12 நிலைகள்:
- பிராணமாசனம்
- அஸ்த உட்டனாசனம்
- அஸ்தபாதாசனம்
- ஏகபாதபிரஸர்நாசனம்
- தந்தாசனம்
- அஷ்டாங்க நமஸ்காரம்
- புஜங்காசனம்
- அத முக்த ஸ்வானாசனம்
- அஸ்வ சஞ்ச்சலனாசனம்
- அஸ்தபாதாசனம்
- அஸ்த உட்டனாசனம்
- பிராணமாசனம்
1.பிராணமாசனம் – மூச்சை வெளியிடுதல்
மந்திரம்: “ஓம் மித்ராய நமஹ”
முதலில், கால்களை ஒன்றாக வைத்தபடி நின்று கைகளை தலைக்கு மேல் தூக்கவும். அதன் பிறகு, கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். அதாவது கடவுளை வணங்கும் போஸில் நிற்க வேண்டும். அடுத்து, மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.
2.அஸ்த உட்டனாசனம் – மூச்சை உள்ளிழுத்தல்
மந்திரம்: “ஓம் ரவயே நமஹ”
மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத்தூக்க வேண்டும். உங்கள் கைகள் உங்கள் காதுகளை தொடும்படி இருக்க வேண்டும். அடுத்து, மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.
3.அஸ்தபாதாசனம் – மூச்சை வெளியிடுதல்
மந்திரம்: “ஓம் சூர்யயே நமஹ”
மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடும்படி வைக்கவும். தலையானது கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இந்த நிலையில் ஒரு சில வினாடிகள் இருக்க வேண்டும்.
4.ஏகபாதபிரஸர்நாசனம் – மூச்சை உள்ளிழுத்தல்
மந்திரம்: “ஓம் பானவே நமஹ”
மூச்சை உள் இழுத்தபடி உங்களின் வலது காலை பின்னோக்கி வைத்து, அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இந்த நிலையில் ஒரு சில வினாடிகள் இருக்க வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
5.தந்தாசனம் – மூச்சை வெளியிடுதல்
மந்திரம்: “ஓம் ககாய நமஹ”
மூச்சை வெளியே விட்டபடியே பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் கொண்டு செல்லவும். அடுத்து, கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.
6.அஷ்டாங்க நமஸ்காரம் – சில நிமிடம் நிறுத்தி வைத்தல்
மந்திரம்: “ஓம் பூஷ்ணே நமஹ”
மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடல் தரையில் படுமாறு வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொடுமாறு வைக்க வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேன்டும்.
7.புஜங்காசனம் – மூச்சை உள்ளிழுத்தல்
மந்திரம்: “ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ”
மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பின் பக்கமாக வளைக்க வேண்டும்.
8.அத முக்த ஸ்வானாசனம் – மூச்சை வெளியிடுதல்
மந்திரம்: “ஓம் மாரீச்சயே நமஹ”
மூச்சை வெளியே விட்டுக்கொண்டே மெதுவாக கைகளை உயர்த்தி அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்த வேண்டும். அதன் பிறகு, மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும்.
9. ஆஷ்வா சஞ்சலனாசனம் – மூச்சை உள்ளிழுத்தல்
மந்திரம்: “ஓம் ஆதித்யாய நமஹ”
இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டே வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.
BP-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய யோகாசனங்கள்!
10.உட்டனாசனம் – மூச்சை வெளியிடுதல்
மந்திரம்: “ஓம் அர்காய நமஹ”
உட்டனாசனத்தில் வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். அடுத்து, தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
11.அஸ்ட உட்டனாசனம் – மூச்சை உள்ளிழுத்தல்
மந்திரம்: “ஓம் அர்காய நமஹ”
அஸ்ட உட்டனாசனத்தில் மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.
12.பிராணமாசனம் -மூச்சை வெளியிடுதல்
சூரிய நமஸ்காரத்தில் முதலில் கூறிய முறை ஆகும். அதாவது, மூச்சை வெளியிட்டப்படியே மீண்டும் முதலில் செய்த பிராணமாசனம் நிலைக்கு வர வேண்டும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |