தியானம் என்றால் என்ன
நம் முன்னோர்கள் எல்லாம் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உடலில் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய பிறந்த குழந்தைக்கு கூட உடலில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவரை நாடி செல்கின்றனர். இன்றைய காலத்தில் உள்ளவர்கள் பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில்லை, யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவை செய்வதில்லை. இதனை செய்யாததற்கு முதன்மையான காரணம் அவற்றை பற்றி தெரியாமல் இருப்பது தான். அதனால் தான் இந்த பதிவில் தியானம் என்றால் என்ன அவற்றை செய்வதினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
தியானம் என்றால் என்ன.?
மனதை அமைதிப்படுத்தவும், நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கும் உதவும் வழிமுறையே தியானம் ஆகும். மேலும் மனதில் நிலையாக வைப்பதற்கும் தியானம் செய்யப்படுகிறது.
இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே கவனம் நிறைந்த மனம், வேறு செய்திகளைப் பற்றிய நினைவு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால், அதற்குத் தியானம் என்று பெயர்.
தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
தியானம் செய்வதால் நம் மனதில் உள்ள மன அழுத்தம் குறைகிறது.
மனதையும், உடலையும் நிதானமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
மனதில் உள்ள கவலைகளை நீக்கி அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கிறது.
அன்பு, இரக்கம் போன்ற குணங்கள் உருவாகி, கோபத்தை குறைக்கிறது.
நாம் கோபம் நிலையில் இருக்கும் போதோ அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போதோ தியானம் செய்தால் மனது அமைதியாகிவிடும்.
நமது மனம் சோர்ந்து துவண்டு விழும் நிலையில் கூட தியானம் செய்தால் நாம் புத்துணர்ச்சி அடைவோம்.
பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முதுமை நிலையை தடுக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிது நன்மையை வழங்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
தலைவலி, தூக்கமின்மை பிரச்சனை, தசை வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது.
தியானம் செய்வது எப்படி.?
தியானம் செய்வதற்கு முதலில் தரையில் ஒரு விரிப்பை போட்டு கொள்ளவும். அதன் மேல் நீங்கள் உட்கார்ந்து கொள்ளவும். பிறகு உடலை தளர்வாக வைத்து கொள்ளவும். அதன் பிறகு உங்கள் இரு கைகளில் கட்டை விரல் மற்றும் ஆள்க்காட்டி விரலை சேர்த்து வைத்து கொண்டு தொடை மேல் வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு மெதுவாக கண்களை மூடி கொண்டு மூச்சை இழுத்து வெளியே விடவும். இது போல 5 நிமிடம் செய்ய வேண்டும். 5 நிமிடமும் உங்கள் மனதை ஒருநிலை படுத்த வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |