பித்தம் குறைய யோகாசனம் – Piththam Kuraiya Yoga

வாதம் பித்தம் கபம் நீங்க யோகாசனம் – Adho Mukha Svanasana Benefits in Tamil

Piththam Kuraiya Yoga – நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது வாதம் பித்தம் கபம் இவை மூன்றையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் ஒரு அருமையான யோகாசனம் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஆசனத்தை தினமும் 5 முறை செய்து வருவதன் மூலம் நமது உடலில் உள்ள கபம், பித்தம், வாதம் இந்த மூன்று நடிகளையும் மிக சீராக மற்றும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். சரி வாங்க அது என்ன யோகாசனம் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

அதோ முக ஸ்வனாசனம் செய்யும் முறை | Adho Mukha Svanasana Benefits in Tamil:

தினமும் ஐந்து முறை அதோ முக ஸ்வனாசனம் செய்து வந்தால் பித்தம் குறைய ஆரம்பிக்கும் சரி வாங்க இந்த யோகாசனம் எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

ஸ்டேப்: 1

முதலில் வஜ்ராசனம் நிலையில் உங்கள் கால்கள் இரண்டையும் மடித்து நிமிர்ந்து நேராக அமர்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் முன்பக்கமாக கைகளை நீட்டி சசங்காசனத்தில் அமரவும். இப்பொழுது உங்களை கைகள் மற்றும் கால்கள் எவ்வளவு லெந்தில் உள்ளதோ அதே அளவில் வைத்துகொள்ளவன்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் தூங்கும் முன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள்..! அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்..!

ஸ்டேப்: 3சாஷ்டாங்க நமஸ்காரம்

பிறகு மெதுவாக முன்பக்கமாக சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் போல் படுத்து இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ளவோம். கைகளை ஊன்றி உடம்பை மட்டும் மேல் நோக்கி தூக்க வேண்டும்.

ஸ்டேப்: 4Adho Mukha Svanasana

பின்பு கால்களை பதியவைத்திவிட்டு இடுப்பை மட்டும் மேல் நோக்கி தூக்கினோம் என்றால் அது தான் அதோ முக ஸ்வனாசனம் ஆகும்.

ஸ்டேப்: 5

பிறகு மறுபடியும் இரு கால்களையும் மடக்கி சசங்காசனத்தில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவும் அதாவது நார்மலாக மூச்சி விடவும். பிறகு கைகளை மேல் நோக்கி தொக்கி இரு கைகளை பக்கவாட்டில் இறக்கி ரிலாக்ஸ் ஆகிவிடவும்.

இது போன்று நீங்கள் 5 முறை தினமும் செய்து வர உடல் புத்துணச்சி பெரும் மற்றும் உடலில் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று நாடிகளும் சீராக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூச்சுத்திணறலை குணப்படுத்த இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியமா போச்சே..!

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா