பிரஷரை குறைப்பதற்கு இப்படியெல்லாம் கூட செய்யலாமா

Advertisement

பிரஷர் குறைய யோகா

இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கின்றார்கள். பணத்தை சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தை ஆரோக்கியத்தில் காட்டுவதில்லை. வீட்டில் இருக்கும் டென்ஷன், வேலையில் இருக்கும் டென்ஸனால் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள். மன அழுத்தம் அதிகரிப்பதோடு பிரஷரும் அதிகரிக்கிறது. இந்த பிரஷரை குறைப்பதற்கு மருத்துவரை நாடி செல்கின்றனர். அவர்கள் மருந்து, மாத்திரை எழுதி தருகிறார்கள். இதனை நம் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இதற்கு இயற்கையான வழிமுறையை தேர்ந்தெடுப்பது நல்லது. அதனால் தான் இந்த பதிவில் பிரஷரை குறைப்பதற்கான  யோகாவை தெரிந்து கொள்வோம் வாங்க.

இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம்:

பெரும்பாலானவர்களுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள். இதனை தவிர்த்தாலே இரத்த அழுதாள் அதிகரிப்பதை தவிர்க்கலாம். மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் கொழுப்பு உணவுகள் அதிக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வஜ்ராசனம்:

வஜ்ராசனம்

முதலில் இரு கால்களையும் நீட்டவும். ஒவ்வொரு காலாக மடித்து இரு கால்களையும் மடக்கி இரண்டு குதி கால்களும் மடக்கி பின்புறமாக வைக்க வேண்டும்.  இரு கைகளையும் கால் மடியில் வைக்கவும் கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியே விடவும்.

இது போல் ஐந்து நிமிடம் செய்துவிட்டு உங்கள் இரு உள்ளங்கைகளையும் இதயத்தில் வைத்து, “எனது இதயம் சீராக இயங்குகிறது, ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது” என்று மனதுக்குள் மூன்று முறை கூறிவிட்டு சாதாரண நிலைக்கு வர வேண்டும்.

கோம்புகாசனம்:

கோமுகாசனம்

முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து உட்கார்ந்த நிலையில் இடது காலை தூக்கி வலது கால் மேலயும், வலது காலை மடக்கி இடது கால் கீழயும் வைக்க வேண்டும்.

இரு கைகளையும் பின்னோக்கி வைத்து சேர்த்தவாறு பிடிக்க வேண்டும். கண்ணை மூடி அமைதியாக இருக்க வேண்டும். இரு கைகளையும் மாத்தி மாத்தி பிடித்து 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.

பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இதே நிலையில் அமர்ந்து கொண்டு இரு கால்களையும் v வடிவத்தில் வைத்து கொள்ள வேண்டும். அதாவது இடது கால் வலது கால் மேலேயும், வலது கால் இடது களிற்கு கீழயும் இருக்க வேண்டும்.

இரு கைகளையும் முட்டியின் மேல் வைத்து கொண்டு கண்ணை மூடி சுவாசத்தை இழுக்க வேண்டும். இதே நிலையில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம்:

பாலாசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு சுவாசத்தை உள்ளித்தவாறே கைகளை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். பிறகு சுவாசத்தை வெளிவிட்டவாறே கைகளை முன்னோக்கி கொண்டு வந்து எடுப்பு பகுதியை குமிய வேண்டும். நெற்றி தரையில் பட வேண்டும். இந்த நிலையிலே 15 நிமிடம் இருக்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள யோகா வகைகளில் உங்களுக்கு எதை செய்யும் முடிகிறதோ அதை தொடர்ந்து செய்தலே bp கண்ட்ரோலுக்கு வரும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement