Chin Mudra Benefits in Tamil | சின் முத்திரை செய்வது எப்படி
வேலையில் இருக்கும் டென்சன், வீட்டில் இருக்கும் டென்ஸனால் பலருக்கும் பல வியாதிகள் வருகின்றது. இதனை சரி செய்வதற்கு மருத்துவர்களை நாடி செல்கின்றனர். இவர்களும் மாத்திரை, மருந்துகளை எழுதி தருகின்றனர். இதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இயற்கையான முறையை கையாளுவது நல்லது.
மேலும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்தால் நம் மனதில் உள்ளமன அழுத்த குறையும். பலரும் இதனை செய்யாமல் இருப்பதற்கு காரணம் இதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது தான். இதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டால் நாம் தினமும் யோகா செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். இந்த பதிவில் சின் முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
சின் முத்திரை என்றால் என்ன.?
சின் என்றால் கன்னம், முத்ரா என்றால் சைகை என்று பொருள்படும். சின்முத்திரை என்பது ஞான அடையாளம் என்பது அர்த்தமாக இருக்கிறது. இது ஒரு யோகாவாக இருக்கிறது.
எப்படி செய்வது:
⇒ சின் முத்திரை செய்வதற்கு முதலில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
⇒ முது மற்றும் தோல் பகுதியானது நேராக இருக்க வேண்டும்.
⇒ பின் கட்டை விரல், ஆள்க்காட்டி விரல் இரண்டையும் ஒன்றாக வைத்து இரண்டு நுனி பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்களை தரை நோக்கி இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும்.
⇒ பிறகு கண்களை மூடி கொண்டு மூச்சை இழுத்து விட வேண்டும், தினமும் இந்த ஆசனத்தை 15 நிமிடம் செய்ய வேண்டும்.
நீண்ட நாட்களாக உள்ள முதுகு வலி கூட சட்டுனு நீங்கிவிடும் இதனை மட்டும் செய்தால் போதும்..!
சின் முத்திரா நன்மைகள்:
இந்த ஆசனம் செய்வதால் உடலில் இரத்த அழுத்த பிரச்சனையானது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். மேலும் உங்களில் கோபத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.
பலருக்கும் நோய்கள் வருவதற்கு காரணமாக இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான், அதற்கு இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்த நோய் தொற்றும் உங்களுக்கு வராது.
உடலில் ஏற்படும் நோய்களில் கொடிய நோயாக இருக்க கூடியது புற்று நோய், இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு சின் முத்திரை உதவுகிறது.
வீட்டில் இருக்கும் பிரச்சனை, வேலையில் இருக்கும் பிரச்சனையினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்கு சின் முத்திரை செய்யுங்கள்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு இந்த ஆசனத்தை செய்யலாம், மேலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
நீங்கள் அதிகமாக சிந்திப்பீர்கள் இதனால் மன குழப்பத்திற்கு ஆளாகுவீர்கள், இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஆசனத்தி செய்யுங்கள்.
உங்களின் உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதற்கு சின் முத்திரை செய்யலாம்.
சிறுநீரக கல் கரைய உடற்பயிற்சி..!
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |