காது நன்கு கூர்மையாக கேட்க யோகாசனம்..!

Advertisement

காதுகள் நன்கு இயங்க எளிய யோகாசனம்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய யோகா பதிவில் நமது காதுகள் நன்கு இயங்க எளிய யோகா முத்திரைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். காது என்பது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். அப்படிப்பட்ட நமது காதுகளில் ஏற்படும் குறைபாடுகள் எல்லாம் நீங்கி வயதான பிறகும் நமது காதுகள் நன்கு கூர்மையாக கேட்க மற்றும் நன்கு இயங்கவும். இந்த பதிவில் கூறப்படும் யோகா முத்திரைகள் பயன்படுகிறது. அப்படி என்ன யோகா முத்திரை அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

காதுகள் நன்கு இயங்க எளிய யோகாசனம்:

1. ஆகாய முத்திரை:

yoga for hearing loss quora in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியான செய்யவும்.

அதன் பிறகு கட்டை விரலின் நுனியையும் , நடுவிரல் நுனியையும் இணைத்து மற்ற விரல்கள் எல்லாம் தரையை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். இந்த முத்திரையை தினமும் அதிகாலையில் 2-5 நிமிடங்கள் செய்து வரவும்.

இந்த முத்திரையை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுடைய காதுகளின் நரம்பு பலப்படும் மற்றும் காதுகளில் எந்த வித பிரச்சனையும் வராது.

2. சண்முகி முத்திரை :

how to improve your hearing naturally in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு இரண்டு கைகளின் கட்டை விரல்களையும் வைத்து இரு காதுகளையும் நன்கு அடைத்துக் கொள்ளவும். மற்ற விரல்களை எல்லாம் மேலே உள்ள படத்தில் உள்ளது போல் வைத்துக் கொள்ளுங்கள். காதுகளின் வழியாக நமது மூச்சு காற்று வெளியே செல்லாதவாறு நன்கு அழுத்தி அடைத்துக் கொள்ளவும்.

பிறகு சாதாரண மூச்சில் 2-5 நிமிடங்கள் இருக்கவும். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பவும். இதே போல் இரண்டு முறை செய்யவும்.

இந்த முத்திரையை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுடைய காதுகளின் நரம்புகளை பலப்படுத்தி அவைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தையும் அளிக்கிறது. மேலும் காதுகளில் எந்த வித பிரச்சனையும் வராத அளவிற்கு நன்கு பலப்படுத்தும்.

 கண்பார்வை அதிகரிக்க யோகாசனம்

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement