முகம் பளபளப்பாக இதை 15 நிமிடம் செய்தால் போதுமா.!

Advertisement

முகம் பளபளப்பாக இருக்க யோகா

முகம் பளபளப்பாக இருக்க கெமிக்கல் நிறைந்த கிரீம்களை நிறைய பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்தும் போது அப்பொழுது ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் அவை முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழிமுறை தான் சிறந்தது. சில பேருக்கு முகத்தை பளபளப்பாக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் இயற்கையான பேக்குகளை செய்வதற்கு நேரம் இல்லை. பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கிறார்கள். அதனால் இந்த பதிவில் கஷ்டப்படாமல் முகம் பளபளப்பாக யோகா இருக்குதா அதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

திரிகோனசனம்:

திரிகோணாசனம்

இந்த ஆசனமானது மார்பு பகுதி, நுரையீரல் பகுதி, இதயம் போன்றவற்றிற்கு நன்மையை தருகிறது. சருமத்திற்கு அதிக ஆக்சிஜனை வழங்கி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

எப்படி செய்வது.?

முதலில் உங்களின் கால்களை அகற்றி நேராக நிற்க வேண்டும். வலது குதிகாலை உட்பக்கமாகவும், பாதத்தை வெளிப்பக்கமாகவும் இருக்கும் படி வைக்க வேண்டும்.

மூச்சை உள் இழுத்தவாறே இடுப்பு பகுதியை வலது பக்க திருப்ப வேண்டும். இடது கையை நேராக மேலேஉயர்த்த வேண்டும். இதைச் செய்யும்போது, உங்கள் இடது உள்ளங்கையை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு சுவாசத்திலும் உங்கள் உடலுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.

நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா.?

உத்தனாசனம்:

உத்தனாசனம்

இந்த ஆசனம் ஆனது சருமத்தில் வழங்கப்படும் ஆக்சிஜனை அதிகரிக்கிறது. பிரீ ரேடிக்கல்களால் ஏற்படக்கூடிய பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது.

செய்முறை:

இந்த ஆசனம் செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். இரு கைகளையும் எடுப்பில் வைத்து மூச்சை உள்ளிழுத்து தலை தரைக்கு வருவது போல கீழே வைக்க வேண்டும். இரு கைகளையும் கணுக்காலை பிடிக்க வேண்டும்.

முக்கியமாக முட்டி வளைய கூடாது. இந்த ஆசனத்தில் 15 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?

சர்வாங்காசனம்:

சர்வாங்காசனம்

இந்த ஆசனம் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தின் அமைப்பையும், தன்மையும் மேம்படுத்துகிறது.

செய்முறை

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக படுத்து கொள்ளவும். அதன் பிறகு கால்களை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். அதன் பிறகு இடுப்பு பகுதியையும் உயர்த்த வேண்டும்.

தாடை நெஞ்சு பகுதியில் வைக்க வேண்டும். நீங்கள் இரு கைகளையும் எடுப்பு பகுதயில் வைக்க வேண்டும்.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

 

Advertisement