நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முடிவதில்லை. முதலில் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதன் பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் யோகா சேயோய வேண்டும். ஒவ்வொரு யோகாவிலும் ஒவ்வொரு நன்மை உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் அந்த யோகாவை செய்வதில்லை. அதனால் தான் இந்த பதிவில் நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
நீர் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
நம் உடலிற்கு எல்லா விதமான சத்துக்களும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதில் ஒன்று நீர்சத்து. இந்த நீர்ச்சத்து நம் உடலில் குறைந்தால் உடல் சோர்வாகும். இதனால் நாம் எந்த செயலையும் சரியாக செய்ய முடியாது. அதனால் நம் உடலிற்கு நீர்ச்சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் நீர்ச்சத்தை சம அளவில் வைத்திருக்க கூடிய நீர் முத்திரையை பற்றி காண போகிறோம்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?
உடலில் உள்ள நீர்ச்சத்தை சம அளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை . இந்த முத்திரையைச் செய்து வந்தால் , நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும். பல வருடங்களுக்கு முன் சிக்கின்குனியாவால் வந்த முடக்குவாதம் , மற்றும் மூட்டுவலி, மூட்டுக்கள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர் தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்து வந்தால் அதற்கான பலனை பெற முடியும்.
முழங்கால் மூட்டு வலி, இடுப்பு வலி, மணிக்கட்டு மற்றும் சிறு மூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவை சாராய் செய்ய உதவுகிறது. இந்த பதிகளில் வலி வருவதற்கு காரணமே வாயுவானது தேங்கி இருப்பது தான். இந்த முத்திரை செய்வதால் உடலில் உள்ள வாயுவை குறைத்து வலியை குறைக்க செய்கிறது.
நீர் முத்திரை செய்வது எப்படி.?
வலது கை பெருவிரல் நுனியுடன், மோதிர விரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இடது கை பெருவிரல் நுனியுடன் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்க வேண்டும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |