பத்மாசனம் செய்வதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..!

padmasana benefits in tamil

Benefits of Padmasana Yoga in Tamil

பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகாசனம் உதவுகிறது. சொல்லப்போனால் உடலில் உள்ள அணைத்து பிரச்சனைகளையும் யோகாசனம் செய்வதன் மூலம் சரிசெய்து விடலாம். யோகாசனம் செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீரான நிலையில் இயங்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. யோகாசனத்தில் பல வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்றான பத்மாசனம் யோகாசனத்தின் பயன்கள் என்ன என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

பத்மாசனம் பயன்கள்:

Benefits of Padmasana Yoga in Tamil

செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது:

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளை தான் நாம் பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகிறம். இவ்வகை உணவுகள் நம் வாயிற்கு சுவையாக இருந்தாலும் நம் வயிற்று பகுதியில் சென்று பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். அதில் முதலாவதாக இருப்பது செரிமான பிரச்சனை. இப்பிரச்சனையை போக்க பத்மாசனம் உதவுகிறது. அதாவது,  பத்மாசனம் செய்வதால் வயிற்று பகுதியில் இரத்த ஓட்டம் மேம்பட்டு செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதனால், செரிமானம் எளிதில் நடைபெற்று செரிமான அமைப்பு ஆரோக்கியமான முறையில் செயல்படுகிறது.

உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோகாசனம்

சுவாச பிரச்சனையை நீக்குகிறது:

 பத்மாசனம் பலன்கள்

பத்மாசனம் செய்வதால் நுரையீரலை சுற்றி அதிக இரத்த ஓட்டத்தை அளிக்கிறது. இதனால் நுரையீரல் நன்றாக செயல்பட்டு சுவாச பிரச்சனையை நீக்குகிறது. மேலும், முதுகு, முதுகெலும்பு மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளையும் வலுப்படுத்துகிறது.

சிலருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கும். எனவே, பத்மாசனம் செய்வதன் மூலம் மூச்சு திணறல் போன்ற அனைத்து சுவாச பிரச்சனைகளும் எளிதில் நீங்கும்.

மூட்டுகளை பலப்படுத்துகிறது:

பத்மாசனம் செய்வதால் நம் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டு பகுதிகள் வலுவுடன் காணப்படுகிறது. மேலும், முக்கியமாக பத்மாசனம் செய்வதால் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வாதம், மூலம் போன்ற நோய்கள் வராமலும் காத்துக்கொள்கிறது.

தூக்கமின்மையை போக்குகிறது:

பலபேர் மன அழுத்தம், பதற்றம் போன்ற பல காரணங்களால் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்படுவார்கள். எனவே, அப்படி இருப்பவர்கள், தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு பத்மாசனம் செய்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

யோகாசனம் பெயர்கள் படங்கள்

பத்மாசனம் செய்வதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

 benefits of padmasana in tamil

பத்மாசனம் செய்வதால் இடுப்பு பகுதி வலுவடைய செய்கிறது. இதனால், பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் வலி, சிக்கல்கள் போன்றவை குறைகிறது.

பெண்கள் பத்மாசனம் செய்வதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு, இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி போன்றவை நீங்குகிறது.

30 வயதிற்கு பிறகு, பெண்களுக்கு உடலில் கால்சியம் அளவு குறைய தொடங்கும். இதனால், இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற எலும்பு சம்மந்தப்பட்ட வலிகள் ஏற்படும். எனவே, பத்மாசனம் செய்வதால் முழங்கால் மூட்டு வலியைக் குறைக்கலாம்.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா