சில நேரங்களில் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க இதை மட்டும் செய்தால் போதுமா.!

Advertisement

பதற்றம் குறைய முத்திரை

பதற்றம் என்பது  மனிதனாகவே பிறந்த அனைவருக்கும் ஏற்பட கூடியது தான்.  எப்பொழுது ஏற்படும் என்றால் மாணவர்களுக்கு எழுதிய முன்னும், பின்னும், ரிசல்ட் வருவதற்கு முன்னும், பின்னும், புதிதாக வேலைக்கு செல்லும் முதல் நாள், வேலைக்கு Interview போகுவதற்கு முன் போன்ற நிலைகளில் பதற்றம் ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் பதற்றம் மற்றும் எப்பொழுதுமே எனக்கு பதற்றம்  ஏற்படுகிறது என்றால் அதனை குறைப்பதற்கு மாத்திரை, மருந்து  எடுத்து கொள்ளாமல் இந்த பதிவில்  கூறியுள்ள யோகாவை செய்து அதற்கு தீர்வை காணுங்கள். சரி வாங்க என்ன யோகா என்று  படித்து  தெரிந்து கொள்வோம்.

டென்ஷனா இருக்கும் போது இதை பண்ணுங்க ரிலாக்ஸா பீல் பண்ணுவீங்க..!

பதற்றம் நீங்க யோகா:

ஒரு விரிப்பை விரித்து அதில் வஜ்ராசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும். அதாவது இரு கால்களையும் பின் பக்கம் வைத்து சின்ன குழந்தைகள் எப்படி உட்காருவார்களோ அது போல் உட்கார்ந்து கொள்ளவும்.

பதற்றம் குறைய முத்திரை

அதன் பிறகு இரு கைகளையும் முன் பக்கம் நீட்டி நெற்றி தரையை தொடும் அளவிற்கு கீழே குமிந்து கொள்ளவும். இந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும்.

பதற்றம் குறைய முத்திரை

அடுத்து முழுவதுமாக குப்பறக்க நீட்டி படுத்து கொள்ளவும். ஒரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து கொண்டு தன்மையை திருப்பி குதிகாலை பார்க்க முயற்சிக்க வேண்டும்.

பதற்றம் குறைய முத்திரை

அடுத்து வஜ்ராசனத்திற்கு வரவும். இரு கைகளையும் நீட்டி முன் பக்கம் வைத்து நெற்றி தரையை தொட்டு இடுப்பை மேல் உயர்த்தவும். இந்த  நிலையில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடவும்.

பதற்றம் குறைய முத்திரை

பின் வஜ்ராசனத்தில் அமர்ந்து இடது கையை பின்னோக்கி கொண்டு, வலது கையை பின்னோக்கி வைத்து இடது கையை பிடிக்க வேண்டும்.

பதற்றம் குறைய முத்திரை

அடுத்த நிலை தரையில் நின்று கொண்டு தலையை முட்டி பகுதி வரைக்கும் குமிந்து இரு கைகளையும் கட்டி கொள்ளவும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறே இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி இரண்டு கைகளையும் பிடிக்க வேண்டும்.

கடைசியாக விரிப்பில் மேலே பார்த்தவாறு படுத்து 2 நிமிடம் கழித்து எந்திரிக்கவும்.

மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..!

இது போன்ற யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்  யோகா 

 

Advertisement