சர்க்கரை நோயை குணப்படுத்தும் யோகா
வணக்கம் நண்பர்களே..! பொதுநலம். காம் பதிவில் ஒவ்வொரு வகையான யோகாசனங்களை பற்றி படித்து இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோய் என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு எவ்வளவு மாத்திரை சாப்பிட்டாலும் எளிதில் குணப்படுத்த முடியவில்லை என்று கவலை பட வேண்டாம். சர்க்கரை நோய் குணப்படுத்தும் சிறந்த யோகாசனம் என்ன என்பதை பற்றி இன்றைய பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ தீராத கழுத்து வலியை போக்குவதற்கு இந்த யோகா மட்டும் செய்தால் போதும்…!
பவன முக்தாசனம் யோகா செய்முறை:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பவன முக்தாசனம் யோகா தினமும் செய்தால் உங்களுடைய சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்து விரைவில் முழுவதுமாக குணமடைய செய்கிறது.
பவன முக்தாசனம் யோகா செய்வதற்கு முதலில் நீங்கள் முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய உடல், மனம் மற்றும் மூச்சு ஆகிய மூன்று சமநிலையில் வைத்து கொள்ளுங்கள்.
அடுத்தது பொறுமையாக தரையில் சமநிலையில் படுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வலது காலை மடித்து உங்களுடைய கைகளால் பிடித்து கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து உங்களுடைய தாடையை கால் முட்டியில் தொடுமாறு 5 நிமிடம் வைத்துக்கொண்டு அதன் பிறகு மூச்சை விட்டு விடுங்கள். இது பவன முக்தாசனத்தின் முதல் நிலை ஆகும்.
அதேபோல இடது காலை மடித்து உங்களுடைய கைகளால் பிடித்து கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து உங்களுடைய தாடையை கால் முட்டியில் தொடுமாறு 5 நிமிடம் வைத்துக்கொண்டு அதன் பிறகு பொறுமையாக மூச்சை விட்டு சமநிலைக்கு வந்து விடுங்கள். இது பவன முக்தாசனத்தின் இரண்டாம் நிலையாகும்.
பவன முக்தாசனத்தின் மூன்றாவது நிலை என்பது முதலில் இரண்டு கால்களையும் மடித்து உங்களுடைய கைகளால் பிடித்து கொண்டு மூச்சை பொறுமையாக இழுத்து தாடை முட்டியை தொடுமாறு வைத்து அதன் பின்பு மூச்சை பொறுமையாக விட்டு விடுங்கள்.
பவன முக்தாசனம் பயன்கள்:
சர்க்கரை நோயாளிகள் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பவன முக்தாசனம் யோகாவை செய்தால் நல்ல பலனை தருகிறது.
மன அழுத்தம் இல்லாமல் உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பவன முக்தாசனம் உதவுகிறது.
நரம்பு மண்டலங்களை சிறப்பாக வைக்க செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதற்கும் இந்த யோகா பயன்படுகிறது.
வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுக்க கூடிய யோகாவாக இருப்பதால் செரிமான உறுப்புகளை நன்றாக செயல்பட செய்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க செய்கிறது.பல நாட்களாக இருந்த முதுகு வலியில் இருந்து விடுபட செய்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது.
இதையும் படியுங்கள் 👇 👇 👇
யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.? |
சருமத்தை பொலிவாக்கும் யோகாசனம்..! |
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..! |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |