PCOD Yoga Exercises in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். எங்கு பார்த்தாலும் மனித உயிர்களுக்கு தீங்கு தரும் செயல்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது, எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழிற்சாலை கழிவுகளும், துரித உணவுகளும் தான் காணப்படுகின்றன. இன்றைய நிலையில் யாருக்கு தான் உடலில் பிரச்சனை இல்லை சொல்லுங்கள். இவ்வளவு ஏன் நம்மில் பலரும் மருந்து மாத்திரைகளை உண்டு தான் உயிர் வாழ்கிறார்கள். சரி இப்போது நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாததை கூட யோகா, உடற்பயிற்சிகளை செய்து குணப்படுத்தி விடலாம். அந்த வகையில் இன்று நாம் PCOD பிரச்சனைக்கு என்ன யோகா செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
கருப்பை கட்டி அறிகுறிகள் |
PCOD பிரச்சனையை குணப்படுத்தும் யோகா எது..?
சேது பந்தாசனம்:
- முதலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் மடித்து அருகில் வைக்கவும்.
- கால் மூட்டுகள் வானத்தைப் பார்த்து இருக்க வேண்டும். வலது கணுக்காலை வலது கையாலும், இடது கணுக்காலை இடது கையாலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு தோள்களுக்கு இடையே எவ்வளவு தூரம் இருக்கிறதோ அதே அளவு தூரம் கால் பாதங்களுக்கு இடையேயும் இருக்குமாறு வைக்க வேண்டும்.
- இதுபோல மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துக் கொண்டு, இடுப்பு மற்றும் முதுகை தரையில் இருந்து மேலே தூக்கவும்.
- அதேசமயம் பாதங்கள், கைகள், கழுத்து, தலையின் பின்பகுதி ஆகியவை தரையிலேயே பதிந்திருக்க வேண்டும்.
- இதே நிலையில் மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
பயன்கள்:
உணவு செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. நரம்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. கழுத்துப் பகுதியின் எலும்பை உறுதி செய்து கழுத்தைப் பலப்படுத்துகிறது. முகத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆசனம் கருப்பை நீர்கட்டிகளை சரி செய்ய உதவுகிறது.
கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகாசனம் |
ஜானு சிரசாசனம்:
- தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி வைத்து அமரவும்.
- பின் இடது காலை மடக்கி குதிகாலை பிறப்புறுப்பை தொடும்படி வைக்கவும். பாதம் வலது தொடையோடு ஒட்டியபடி இருக்கட்டும்.
- வலது காலை இடுப்புக்கு நேராக நகர்த்தி வைக்கவும்.
- கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை ஆழமாக இழுத்து, நிதானமாக வெளியே விட்டபடி நேராக நீட்டி வைத்திருக்கும் வலது காலின் கட்டை விரலை இரு கைகளாலும் பிடித்துக் கொள்ளவும்.
- கால் வளையாமல் நேராக இருக்க வேண்டும். தலையை மேலே உயர்த்தி 2 முறை ஆழமாக மூச்சை இழுத்துவிடவும்.
- மூச்சை வெளியே விட்டபடி உடலை வளைத்து, வலது முழங்காலை நெற்றி தொடுமாறு வைக்கவும்.
- முழங்கை மூட்டுக்களை தரையில் தொடும்படி வைக்கவும். இதே நிலையில் மூச்சை உல் இழுத்து வெளியே விடவும்.
பயன்கள்:
விலாப்புற தசைகள், நுரையீரல்கள், இடுப்பு, கால்கள் மற்றும் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும். அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். இந்த ஆசனம் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க உதவுகிறது.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |