உடல் எடையை குறைக்க இந்த ஒரு உடற்பயிற்சி மட்டும் போதும்..

Advertisement

Plank Exercise Benefits in Tamil

இன்றைய காலத்தில் உடல் எடை  அதிகரிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பெரிதும் கவலை அடைகின்றனர். ஒல்லியாக இருந்தாலும் பிரச்சனை, குண்டாக இருந்தாலும் பிரச்சனை. எப்படினு கேட்கறீங்களா.! ரொம்ப ஒல்லியாகவும் இருக்க கூடாது, ரொம்ப குண்டாகவும் இருக்க கூடாது. உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். நீங்கள் உங்களின் உயரத்திற்கான ஏற்ற எடை இருகின்றீர்கள் என்றால் கவலை அடையதேவையில்லை.

எடை அதிகமாக உள்ளோம் என்று பல முறைகளில் வெயிட்டை குறைப்பதற்கு முயற்சி செய்வார்கள். நீங்கள் பல் முயற்சி செய்தும் உங்களின் எடை குறையவில்லை என்றால் இந்த பதிவில் உள்ள உடற்பயிற்சியை செய்து உடல் எடையை சரியாக வைத்திருங்கள்.

பிளாங்க் உடற்பயிற்சி செய்வது எப்படி.?

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

முதலில் தரையில் ஒரு விரிப்பை போட்டு கொள்ளவும். அதன் பிறகு அதன் மேல் நீங்கள் குப்புற படுத்து கொள்ளவும்.

பிறகு இரு கைகளையும் கீழே வைத்து கொண்டு உடலை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். பிறகு இரு காலின் விரலானது தரையில் படுமாறு இருக்க வேண்டும்.

நீங்கள் இந்த உடற்பயிற்சியை ஆரம்பத்தில் செய்யும் போது 20 நிமிடம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாளடைவில் 1 மணி நேரம் செய்யலாம். நீங்கள் அதிக நேரம் இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும்.

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

தசைகள் பலம்:

இந்த உடட்பயிற்சி செய்வதன் மூலம் கை, கால் மற்றும் கழுத்து பகுதி போன்றவைகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தசைகளை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் தசைகள் பலமாக இருந்தால் உடல் பலமாக இருக்கும்.

பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

கொழுப்பு குறைய:

இந்த உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. கொழுப்பை குறைத்து தோற்றத்தை சீராக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

முதுகு வலி குறைய:

முதுகு வலி குறைய

பெரும்பாலும் இன்றைய கால கட்டத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் முதுகு வலி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு இந்த உடற்பயிற்சியானது பெரிதும் உதவுகிறது.

மன அழுத்தம்:

வேலையில் இருக்கும் டென்ஷன் காரணமாக இன்று பலரும் சந்திக்க கூடிய பிரச்சனையாக மன அழுத்தம் இருக்கிறது. இந்த மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு இந்த பிளாங்க் பயிற்சி உதவி செய்கிறது. மேலும் பதற்ற நிலையை குறைப்பதற்கும் இந்த உடற்பயிற்சி உதவி செய்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?

பிளாங்க் உடற்பயிற்சி செய்வது ஏன்.?

பிளாங்க் உடற்பயிற்சியானது தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க கூடிய பயிற்சியாக இருக்கிறது. மேலும் இதை செய்வதால் கை, கால், கழுத்து, இடுப்பு போன்ற பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அதிலுள்ள வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement