பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தான் நினைக்கின்றனர், ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு முறை காரணமாக நமது ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகளை உட்கொள்கிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அப்புறம் நோயை சரி செய்வதற்கு என்ன தான் செய்வது என்று கேட்பது புரிகிறது. பிரச்சனை வந்ததுக்கு பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதை விட பிரச்சனை வருவதற்கு முன்னரே அதனை வராமல் தடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் வருமுன் காப்பதே சிறந்தது. பல நபர்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆனால் அதனின் நன்மைகள் பற்றி முழுமையாக தெரியவில்லை. அதனால் தான் இந்த பதிவில் பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
உடலில் ஏற்படும் அசதியை நீக்குகிறது.
கண்களில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவற்றை சரி செய்து பார்வை தெளிவடையும்.
உடல் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது.
நம்மை சுறுசுறுப்பாக மாற்றுகிறது.
தசை வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
பதற்ற நிலையை சரி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
மனதை அமைதியாக வைத்து கொள்கிறது.
எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது.
நம்பிக்கை தன்மையை வளர்கிறது.
வைட்டமின் ஏகே போன்ற சத்து குறைபாடால் ஏற்படும் பிரச்சனைகளை சாராய் செய்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா..?
பிராண முத்திரை செய்வது எப்படி.?
இந்த முத்திரையை செய்வதற்கு நேராக உட்கார வேண்டும், இதில் நீங்கள் பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்.
பிறகு மோதிர விரல், சுண்டி விரல், பெரு விரல் மூன்றையும் ஒன்றாக வைத்து வைத்து மற்ற இரண்டு விரல்களையும் நீட்டி முட்டியின் மேல் வைக்க வேண்டும்.
கண்களை மூடி கொண்டு மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். இது போல 10 நிமிடத்திற்கு செய்ய வேண்டும்.
முக்கியமாக நீங்கள் இதை செய்யும் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
இந்த முத்திரையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்ய வேண்டும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |