பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி, அதன் நன்மைகள்

Advertisement

பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி.? | பிராணாயாமம் பயன்கள்

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் சுத்தமான காற்றையும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டார்க்ள. இதன் மூலம் இவர்களின் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சுத்தமான காற்றும் கிடைப்பதில்லை, ஆரோக்கியமான உணவையும் சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு தீர்வாக மருத்துவரை நாடி தான் செல்கிறார்கள். அவர்களும் மாத்திரை, மருந்துகளை தான் எழுதி தருகிரார்கள். இதில் நன்மை மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் இயற்கையான முறையில் சரி செய்வது அவசியமானது. நம்முடைய பதிவில் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி என்று பதிவிட்டுள்ளோம். இந்த பதிவில் பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பிராணாயாமம் செய்வது எப்படி.?

பிராணாயாமம் செய்வது எப்படி

முதலில் பிராணாயாமம் செய்வதற்கு சமணம் போட்டு அமர வேண்டும். அதன் பிறகு பத்மாசனம் முரளிகள் உட்கார வேண்டும். அதவாது இடது காலை வலது கால் மேலும்ம் வலது அகழி இடது ககால் மேலயும் போட வேண்டும். இந்த நிலையில் அமர்ந்த பிறகு உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்த வேண்டும். இதனை பல்வேறு முறைகளில் செய்யலாம். அதனை பற்றி காண்போம்.

இடது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை இழுத்து, இதன் வழியாகவே மூச்சை விடுவது இடகலை என்று அழைப்பர். வலது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை இழுத்து, இதன் வழியாகவே மூச்சை வெளியிடுவது பிங்கலை என்று அழைப்பார்கள்.

இன்னொரு முறை வலது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை இழுத்து, இடது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். நீங்கள் மூச்சை இப்படி உள்ளிழுக்கும் போது இன்னொரு மூக்கு துவாரத்தை மூடி கொள்ள வேண்டும்.

மூச்சை உள்ளிக்கும் முறையை பூரகம் என்றும், மெதுவாக வெளியிடுவதை ரேசகம் என்றும் கூறுவார்கள். சுவாசத்தை நிறுத்தி வைப்பதை கும்பகம் என்று கூறுவார்கள்.

பிராணாயாமம் செய்வதால் என்னன்னே நன்மைகள்:

  • இந்த பயிற்சியை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும், காலை மற்றும் மாலை நேரங்களில் செய்யலாம்.
  • இந்த பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைந்து, ,மன அமைதி கிடைக்கிறது.
  • உடலி புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
  • சுவாசம் மண்டலமே ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது
  • செரிமான பிரச்சனை இருக்காது, மலத்தை ஈசியாக வெளியேற்றுவதற்கு உதவுகிறது. மலசிக்கல் பிரச்சனை இருக்காது.
  • இந்த பயிற்சி செய்யும் போது எழுந்து சுவாசிப்பதால் இரத்த ஓட்டம் சீராக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
  • இந்த பயிற்சியை தினமும் செய்வதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement