Prithvi Mudra Benefits in Tamil | பிரித்வி முத்திரை பயன்கள்
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் பிரிதிவி முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம் உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் யோசனம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் ஏற்ற பல யோகாசனங்கள் உள்ளது. ஆகையால், உடலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருந்துகளை உட்கொள்ளாமல், அதற்கு பதிலாக பலனளிக்கக்கூடிய இயற்கை மருந்துகளையும் யோகாசனங்களை செய்வதன் மூலம் உடல் வலிமை பெரும்.
நாம் அனைவருமே முத்திரைகளில் ஒன்றான பிரிதிவி முத்திரை பற்றி அறிந்து இருப்போம். ஆகையால், பிரிதிவி முத்திரை எப்படி செய்வது.? என்பதையும், பிரிதிவி முத்திரை செய்வதால் கிடைக்ககூடிய நன்மைகள் பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Prithvi Mudra Benefits | பிரிதிவி முத்திரை:
பிருத்வி முத்ரா, “பூமி” என்பதற்கான சமஸ்கிருத வார்த்தையின் பெயரால் பெயரிடப்பட்ட ஒரு கை முத்ரா ஆகும். மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியுடன் சேர்த்து வைப்பது பிரிதிவி முத்திரை ஆகும். இருவிரல்களையும் மெதுவாக அழுத்தி செய்ய வேண்டும். பிருத்வி என்பது நம் உடலில் இருக்கும் பூமியின் புலனைக் குறிக்கிறது. மேலும், உடலில் உள்ள நெருப்பு புலன்களைக் குறைக்கிறது.
பிரிதிவி முத்திரை செய்யும் முறை:
- முதலில், வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் முறையில் அமர வேண்டும்.
- அடுத்து கண்களை மூடிக்கொண்டு மூச்சினை மெதுவாக இழுத்து விட வேண்டும்.
- கட்டைவிரலின் நுனியால் மோதிர விரலின் நுனியைத் தொட வேண்டும், மீதமுள்ள மூன்று விரல்களை நீட்ட வேண்டும்.
- இரு கைகளையும் தொடையின் மேல் பகுதியில் வைத்து, ‘ஓ’ என்று உச்சரித்து மனதை ஒருநிலைப்படுத்தி செய்ய வேண்டும்.
இந்த முத்திரையை ஆரம்ப காலத்தில் 5 நிமிடம் செய்ய வேண்டும். அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 25 நிமிடம் வரை செய்யலாம்.
சின் முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
முக்கியமான நன்மைகள்:
- உடல்சோர்வும் மனசோர்வும் நீங்கும்.
- உணவு எளிதில் ஜீரணமாகும்.
- வாயுத்தொல்லை நீங்கும்.
- உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
- உடல் வெப்பத்தை தணிக்கிறது.
- இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
Prithvi Mudra Benefits For Hair in Tamil:
பிரிதிவி முத்திரை செய்வதன் மூலம் தலைமுடி அடர்த்தியாகவும் செழிப்பாகவும் வளர்கிறது. அதாவது, முடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. எனவே, நீங்கள் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு பட்டு வந்த இந்த முத்திரையை செய்ய மறக்காதீர்கள்.
Prithvi Mudra Benefits For Weight Gain in Tamil:
உடல் பலவீனமாக உள்ளவர்கள் Prithvi Mudra தினமும் 20 அல்லது 25 நிமிடம் செய்வது வருவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்.
Prithvi Mudra Benefits For Skin in Tamil:
Prithvi Mudra சருமத்தின் தரத்தை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள மனசோர்வும், உடல் சோர்வு அனைத்தையும் நீக்குவதன் மூலம் சருமத்தின் தரத்தை அதிகரிக்க செய்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பிராண முத்திரை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |