நின்றநிலையில் செய்யப்படும் எளிய யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Standing Asanas Names in Tamil

இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கைமுறை பலவகையான மாற்றத்தை எதிர்கொள்ளுகிறது. அதனால் நமக்கு பலவகையான சோதனைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவ்வற்றையெல்லாம் நாம் சரி செய்வதற்குள் நமது பாடுபடத்தப்படகிவிடுகிறது. அதனால் நமக்கு பல மனஉளைச்சல் ஏற்படுகிறது. அவற்றால் நமக்கு பலவகையான உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றது. அப்படி நமது உடலுக்கு ஏற்படும் உடல்நல குறைபாடுகளை பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலத்திற்கு தான் பலன் அளிக்கும். ஆனால் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது.

ஆனால் யோகாசனம் செய்வதன் மூலம் நமது உடலை மிகவும் வலுவாக வைத்து கொள்ள முடியும். அதனால் தான் இன்றைய பதிவில் நின்றநிலையில் செய்யப்படும் சில யோகாசனங்களை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன யோகாசனம் அவற்றை எவ்வாறு செய்வது போன்ற தகவலைகளை அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா

1. தடாசனா:

Tadasana in tamil

இந்த யோகாசனத்தை செய்வதற்கு முதலில் உங்களின் கால்களை இரண்டினையும் நெருக்கமாக அல்லது இடுப்பு அகலத்தில் வைப்பதன் மூலம் தொடங்கவும். உங்கள் எடை உங்கள் கால்களின் நான்கு மூலைகளிலும் சமமாக பரவியிருப்பதை உறுதி செய்யவும்.

மூச்சினை உள்ளிழுத்தவாறே உங்களது கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடுத்து குதிகால்களை தரையில் இருந்து உயரத்தில் உங்கள் கால்களின் விரல்களின் மூலம் நில்லுங்கள். இந்த நிலையில் 10 முதல் 15 வினாடிகள் நில்லுங்கள்.

அதன் பிறகு கால்களை சமநிலைக்கு கொண்டு வந்து மற்றும் கைகளையும் கால்களை சமநிலைக்கு கொண்டு வந்து ஆசனத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆசனத்தைச் செய்வதால் உடலின் எல்லாத் தசைகளும் புத்துணர்ச்சி பெறும்; கணுக்கால்கள், தொடைகள், அடி வயிறு, முதுகு ஆகியவை பலமாகும்.

2. விருட்சாசனம்:

Tree pose yoga in tamil

இந்த ஆசனத்தை நீங்கள் செய்வதற்கு, முதலில் உடலின் பக்கவாட்டில் கைகளை வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்னர் வலது முழங்காலை சற்று மடக்கி, வலது பாதத்தை இடது காலின் மேல் உயரமாக வைக்கவும்.

இதையடுத்து உங்களது கால்கள் நிமிர்ந்து இருப்பதை உறுதி செய்து, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கார முத்திரையில் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்களது முதுகுத் தண்டை நேராக வைத்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பிறகு இயல்பு நிலைக்கு மெதுவாக வந்து மற்ற காலால் மீண்டும் செய்யவும். இந்த ஆசனம் கால் தசைகளை வலுவடையச் செய்யவும், கால்களின் தசை நாண்கள் மற்றும் தசை நார்கள் வலுப்பெற உதவும்.

உடல் சூட்டை இப்படியெல்லாம் குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

3. உத்தித திரிகோணாசனம்:

Utthita trikonasana in tamil

முதலில் தாடாசனத்தில் நிற்கவும். அதன் பிறகு இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்.

இடது கால் பாதத்தை சற்று வலது புறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும். அடுத்து மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும். வலது கையால் வலது கணுக்காலைப் பிடிக்கவும். இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கையை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும்.

உங்கள் பார்வை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.

இந்த உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

உடல் எடையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement