வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது..! இதில் உடல் எடையை குறைக்க எது சிறந்தது..?

Updated On: May 31, 2023 10:21 AM
Follow Us:
Cycling Vs Swimming For Weight Loss in Tamil
---Advertisement---
Advertisement

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது | Cycling Vs Swimming For Weight Loss in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களுக்கு பிடித்த எக்சர்சைஸ் எது..? ஏன் கேட்கிறேன் என்றால், நம்மில் பலரும் கை கால்களை அசைப்பதை தான் யோகா என்று நினைத்து  கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் சைக்கிள் ஓட்டுவதாக இருக்கட்டும், நீச்சலடிப்பதாக இருக்கட்டும், ஓடுவதாக இருக்கட்டும் அனைத்துமே உடற்பயிற்சிகள் தான். சரி இன்றைய நிலையில் பலருக்கும் இருக்க கூடிய கவலை என்றால் உடல் எடை அதிகரிப்பது தான். சிலர் உடை கொஞ்சம் பிடிப்பாக இருந்தாலும் உடனே குண்டாகி விட்டோம், ஏதாவது உடற்பயிற்சி செய்து எடையை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சரி இன்று நாம் நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது இதில் உடல் எடையை குறைக்க எது சிறந்தது என்று பார்க்கலாம்.

பின்னாடி நடப்பதால் இவ்வளவு நடக்குதா.. இனி யாரெல்லாம் பின்னாடி நடப்பீர்கள்

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது எடையை குறைக்க எது சிறந்தது..? 

 

அப்படி உடல் எடையை குறைக்க எத்தனையோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் நம்மில் பலருக்கும் தெரிந்த உடற்பயிற்சி என்றால் அது சைக்கிள் ஓட்டுவது, நடப்பது, நீச்சலடிப்பது, ஓடுவது ஆகும்.

இதில் சைக்கிள் ஓட்டினால் உடல் எடை குறையுமா அல்லது நீச்சலடித்தால் உடல் எடை குறையுமா என்று காண்போம்.

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது

நீச்சலடிப்பது: நீச்சல் என்பது அனைத்து உடல் உறுப்புகளையும் பயன்படுத்தும் குறைந்த தாக்கம் கொண்ட பயிற்சியாகும். அதனால் தான் அதிக கலோரிகளை எரிக்க இது உதவுகிறது. இது ஒரு சிறந்த இருதய பயிற்சியாகும். ஏனெனில் இது உங்கள் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு நன்மையை செய்கிறது.

உங்களுக்கு தெரியுமா நடைப்பயிற்சி எவ்வளோ நன்மை என்று

மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் நீச்சல் நல்லது. நீர் உடல் எடையை ஆதரிக்கிறது. இதனால் மூட்டுகளில் எந்த அழுத்தமும் இல்லை. அதுபோல 70-80 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் ஒரு மணிநேரம் நீச்சல் அடிப்பதால் சுமார் 750 கலோரிகள் வரை குறைகிறது. 

நீச்சலடிப்பது Vs சைக்கிள் ஓட்டுவது

சைக்கிள் ஓட்டுவது: பொதுவாக நம் அனைவருக்குமே சைக்கிள் ஓட்ட தெரியும். சைக்கிள் ஒட்டுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். அப்படி நாம் சைக்கிள் ஓட்டும் போது நம் உடலின் கீழ்ப்பகுதிகளான கால்நீட்டுத் தசை, தொடை எலும்புகள் அல்லது தசை நார்கள் மற்றும் பின்பகுதி தசைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

பித்தம் குறைய யோகாசனம்

உடலின் மேல்பகுதியில் அந்தளவிற்கு இயக்கம் இருக்காது. அதுபோல இதில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இதனால் இடுப்பு தசைகள் மற்றும் முழங்கால்களில் அடிக்கடி வலி ஏற்படும். அதுபோல 70-80 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் 10-15 மைல் வேகத்தில் சைக்கிள் ஓட்டும் போது சுமார் 600 கலோரிகள் வரை குறைகிறது. 

இரண்டில் எது சிறந்தது..? 

நீச்சல் அடிப்பதாக இருந்தாலும் சரி சைக்கிள் ஓட்டுவதாக இருந்தாலும் சரி இரண்டுமே நம் உடலில் உள்ள கலோரியை குறைப்பதற்கு மிகவும் உதவும் உடற்பயிற்சிகளாகும். ஆனாலும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதை விட ஒரு மணி நேரம் நீச்சல் அடிப்பதில் அதிக கலோரி வீணாவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் தூங்கும் முன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள்.. அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.. 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now