Yoga Asanas for Reducing Body Heat in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நமது சுற்றுசூழலின் வெப்பம் அதிகரித்துவிட்டது. அதனால் நமது உடலின் வெப்பமும் அதிகரித்துவிட்டது. இந்த உடல் வெப்பத்தை குறைப்பதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலத்திற்கு தான் பலன் அளிக்கும். ஆனால் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் உடலின் வெப்பத்தை குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் உங்களின் உடலின் வெப்பத்தை விரைவில் மற்றும் நிரந்தரமாக குறைத்து கொள்ளுங்கள்.
உடல் எடையை இப்படியெல்லாம் கூட குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
Yoga to Reduce Internal Body Heat in Tamil:
உஸ்ட்ராசனா:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் மண்டிக்கால் இட்டு நில்லுங்கள். பின்னர் உங்களின் உடலை பின்பக்கமாக வலையுங்கள். பிறகு உங்களின் கைகளால் கால்களை பற்றி கொள்ளுங்கள்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உடல் வெப்பம் படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
அல்சரை இப்படியெல்லாம் கூட குணமாக்கலாமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
புஜங்காசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைத்து கொள்ளுங்கள். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக தரைவிரிப்பின் மேல் பலமாக ஊன்றி கொள்ளுங்கள். மூச்சை உள்ளுக்கு இழுத்து தலையை தரையிலிருந்து மேலே தூக்கி நெஞ்சை உயர்த்தி வயிறு வரை மெல்ல உயர்த்திக் கொண்டு போய் நிறுத்தவும், மூச்சை வெளியே விட்டு தலையையும், முதுகையும் முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து மார்பை நன்றாக விரிக்கவும்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் உடல் வெப்பம் படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம். மேலும் இது நீண்ட நாட்களாக உள்ள முதுகு வழியை குறைக்க உதவுகின்றது.
மூச்சுத்திணறலை குணப்படுத்த இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கா இத்தனை நாளா இது தெரியமா போச்சே
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |