Yoga to Look Younger in Tamil
அனைவருமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இதற்காக நாம் பல முயற்சிகளையும் எடுத்து வருவோம். ஆனால் எந்தவிதமான கிரீமும் போடாமல் 40 வயதானாலும் 20 வயதுபோல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னதான் நாம் இளமையாக இருக்க பல க்ரீம்களை பயன்படுத்தி வந்தாலும் அதெல்லாம் ஒரு சில காலம் மட்டுமே நமக்கு பயனளிக்கும். ஆனால் யோகா அப்படி அல்ல. நீங்கள் தினமும் ஒருமுறை மட்டும் செய்து வந்தால் போதும் ஆயுள் வரை இளமையான தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும். எனவே என்றுமே இளமையாக இருக்க இந்த யோகா பயிற்சிகளை தினமும் செய்து பயனடையுங்கள்.
பெண்கள் உடல் எடையை அதிகரிக்க எதையும் சாப்பிட வேண்டாம்.! இதை மட்டும் செய்தால் போதுமா.! |
Yoga Asanas to Stay Young in Tamil:
பச்சிமோத்தாசனம்:
பச்சிமோத்தாசனம் செய்வதற்கு தரைவிரிப்பு ஒன்று போட்டு அதன்மேல் இரு கால்களையும் மடக்கி முதுகை நிமிர்த்தி உட்கார வேண்டும். பிறகு, இரு கண்களை மூடி கொண்டு தன் இரு கைகளையும் மடியின் மேல் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும்.
இப்போது, நாம் இயல்பாக விடும் மூச்சினை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் பின், பொறுமையாக கண்களை திறந்து கொண்டு, தன் இரு கால்களையும் நீட்டி கொள்ளுங்கள்.
பிறகு, தன் இரு கைகளையும் மேலே உயர்த்தி மூச்சினை மெதுவாக வெளியிட்டு கொண்டே இரு கைகளையும் காலின் பெருவிரல்களை தொடுவதற்கு முயற்சிக்கவும். இந்நிலையில் 10 வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பிறகு மெதுவாக மேல்நோக்கி எழுந்து விடவேண்டும்.
இறுதி நிலையில் கூறியுள்ள நிலையினை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டும்.
சஸங்காசனம்:
சஸங்காசனம் செய்வதற்கு முன் வஜ்ராசனம் செய்யவேண்டும். இப்போது முதலில் தன் இரு கால்களையும் ஒவ்வொன்றாக முன்புறம் மடக்கி உட்கார வேண்டும். பிறகு இரு கைகளையும் பின்புறமாக வைத்து மூச்சினை மெதுவாக வெளியிட்டு கொண்டே முன்புறமாக தலையினை தரையில் வைக்கவேண்டும். இந்நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும்.
பிறகு, சாதாரண மூச்சில் எழவேண்டும். மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்ய வேண்டும்.
இப்போது, இரு கைகளையும் முன்புறமாக தரையில் நீட்டியவாறு தலையை தரையில் படும்படி வைக்கவேண்டும். இந்நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். பிறகு எழுந்து வஜ்ராசனத்தில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
மேற்கூறிய இரண்டு யோகாசனங்களையும் செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் அதன் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்க வழிவகுக்கும்.
ஒரு நாள் இந்த யோகாவை செய்தால் போதும்..! பெண்கள் நினைத்ததை போல அழகாக மாறிவிடுவார்கள்..! |
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |