Yoga for Healthy Spleen in Tamil
மண்ணீரல் நமது வயிற்றின் இடது பகுதியில் உள்ளது. பழைய இரத்த அணுக்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது தான் மண்ணீரலின் முக்கிய பணியாகும். அத்துடன் நோய் எதிர்ப்பாற்றலை முறைபடுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நமது உடலின் மிகவும் முக்கியமான பணிகளை ஆற்றும் உறுப்புகளில் ஒன்றான மண்ணீரலை பலப்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் மண்ணீரலை பலப்படுத்தி கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> மண்ணீரல் நோயிற்கான இயற்கை வைத்தியம்
Yoga for Spleen Health in Tamil:
1. பாலாசனா:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பின் தலையை தரையில் படுமாறு வைத்து கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
இந்த நிலையில் 5 – 10 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் மண்ணீரல் நன்கு பலப்படும்.
2. பச்சிமோத்தாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமருங்கள். பின்னர் உங்களின் கைகளை நீட்டி கால்களின் பாதங்களை பிடிக்கவும் இந்த நிலையில் உங்களின் தலை உங்களின் முட்டியில் படுமாறு கீழ் நோக்கி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 5 – 10 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் மண்ணீரல் நன்கு பலப்படும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் செயல்பட யோகாசனம்
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |