Siruneeraga Kal Karaya
இக்காலத்தில் யாருக்கு என்ன நோய் எப்போது வருகிறது என்றே தெரிவதில்லை. அந்த அளவிற்கு நோய்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவே ஆகும். அக்காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இயற்கையான உட்கொண்டு இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தார்கள். ஆகையால், அவர்களுக்கு உணவே மருந்தாக இருந்தது. என்ன நோய் ஏற்பட்டாலும் அவர்கள் இயற்கையான பொருட்களை வைத்தே மருத்துவம் பார்த்து கொண்டார்கள். ஆனால், இக்காலத்தில் அப்படியே தலைகீழாக உள்ளது. இக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் வருகின்றது. அதிலும், குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கல் போன்ற நோய்களால் பெரும்பாலனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சிறுநீரக கல் என்பது, சிறுநீரகத்தில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதாலும், தண்ணீர் குறைவாக குடிப்பதாலும், இதுபோன்ற பல காரணங்களால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. எனவே, இதனை குறைக்க மருந்துகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க இயற்கையான வழிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல், சிறுநீரக கல் கரைய உடற்பயிற்சியும் உள்ளது. ஆகையால், இப்பதிவின் மூலம் சிறுநீரக கல் கரைய செய்ய வேண்டிய உடற்பயிற்சி பற்றி பார்க்கலாம்.
சிறுநீரக கல் கரைய உடற்பயிற்சி:
உடலின் அணைத்து பிரச்சனைகளுக்கும் உடற்பயிற்சி ஒரு சிறந்த மருந்தாகும். அந்த வகையில் உடலில் ஏற்படும் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு ஒரு சில பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கிறது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
கருடாசனம், உஷ்ட்ராசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்கள் சிறுநீரகக் கற்களைத் தடுப்பதிலும், சிறுநீரகக் கற்களின் வலி மற்றும் அவற்றின் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், சூரிய நமஸ்காரத்தில் உள்ள முதல் ஆறு ஆசனங்களும் சிறுநீரக கற்களை கரைய செய்கிறது.
BP-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய யோகாசனங்கள்!
1.கருடாசனம்
கருடாசனத்தில் நேராக நின்று இரண்டு கைகளையும் உடம்பிற்கு பக்கவாட்டில், நேராக நீட்ட வேண்டும்… பார்வையை ஒரு இடத்தில் நிலைநிறுத்தி வலது காலை உயர்த்தி, இடது கணுக்காலை பின்னி கொள்ள வேண்டும். அடுத்து, வலது கை மேலாகவும், இடது கை கீழாகவும் இருக்குமாறு பின்னிக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக மூச்சு இழுத்து விடுதல் வேண்டும். இந்நிலையில் சில வினாடிகள் அப்படியே இருந்து அதன் பிறகு சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு மீண்டும், ஒரு முறை காலை மாற்றி செய்ய வேண்டும்.
2.உஷ்ட்ராசனம்
முதலில் தரை விரிப்பில் சாதாரணமாக உட்கார வேண்டும். அதன் பிறகு, இரு கால்களையும் மடக்கி வஜ்ராசனம் போஸில் அமரவும். இந்நிலையில் முட்டி போட்டு நின்றபடியே படத்தில் உள்ளவாறு பின்னோக்கி வளைந்து உங்கள் கைகளை கொண்டு உங்கள் குதிகால்களை தொட வேண்டும். இப்போது நன்கு மூச்சை இழுத்து விடவும். அதன் பிறகு, கால்களில் இருந்து கைகளை மெல்ல எடுத்து மெதுவாக சாதாரண நிலைக்கு திரும்பவும்.
3.புஜங்காசனம்
தரை விரிப்பில் குப்புற படுத்து கொள்ளுங்கள். உங்களின் இரு உள்ளங்கைகளையும் மார்பு, தோள்பட்டைக்கு பக்கவாட்டில் தரையில் பதியுமாறு வைக்க வேண்டும். கால்ககளை சேர்த்து வைக்க வேண்டும். இந்நிலையில் மூச்சை இழுத்துக்கொண்டே, கைகளை நன்கு ஊன்றியவாறு, தலை மற்றும் மார்புப் பகுதியை உயர்த்தி பார்வை மேல் வானத்தை நோக்கி இருக்குமாறு செய்யுங்கள். சில நிமிடம் செய்ததும் மூச்சை வெளியே விட்டபடியே, தலை, மார்புப் பகுதியை கீழே இறக்கி, குப்புற படுத்து ரிலாக்ஸ் செய்யவும்.
மண்ணீரலை பலப்படுத்த உதவும் யோகாசனம்..!
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |