கால்கள் நன்கு வலிமைப்பெற யோகாசனம்..!

yoga for leg strength and balance in tamil

கால்களின் வலிமை மற்றும் சமநிலைக்கான யோகாசனம்..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் நாம் பார்க்க இருப்பது கால்களை நன்கு வலிமையாக வைத்திருப்பதற்கான சில யோகாசனங்களை பற்றி தான். நமது உடலை முழுதாக வலிமையுடன் தாங்கி  நிற்பதே நமது கால்கள்  முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றான நமது கால்களை எப்படி மிகவும் வலிமையாக வைத்திருப்பது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கால்களை வலிமைப்படுத்த யோகாசனம்:

1. தடாசனம் :

tadasana benefits in tamil

இந்த தடாசனம் என்பது ஆரம்ப நிலை யோகாசனம் ஆகும். “தடா” என்றால் மலை போல் தீர்க்கமாக நிற்பதை குறிக்கிறது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் கால்களை ஒன்றாக சேர்த்து முழங்கால்களை வளைக்காமல் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும்.

அதன் பிறகு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு இரண்டு கைகளையும் நமஸ்காரம் செய்வது போல் வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மூச்சை உள்ளிழுத்தபடியே குதிகால்களை மேலே உயர்த்திக் கொள்ளவும்.

குதிகால்களை உயர்த்தியபடியே சில நொடிகள் நின்ற பிறகு மூச்சை விட்டபடி குதிகால்களை இறக்கி, சாதாரண நிலைக்கு திரும்பவும். இதேபோல் இரண்டு (அல்லது) மூன்று முறை திரும்பி திரும்பி செய்யவும்.

இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் உயரமாக வளர மற்றும் குதிகால் வலிகள் நீங்க உதவுகிறது. மேலும் உடலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மற்றும் கால்கள் நன்கு வலிமை பெறவும் உதவுகிறது.

2. கருடாசனம்:

garudasana benefits in tamil.jpg

நின்று செய்யும் ஆசனங்களில் இந்த கருடாசனமும் ஒன்று. வடமொழியில் கருட என்றால் கருடன் அல்லது கழுகு என்பது பொருள். இந்த கருடாசனத்தை ஆங்கிலத்தில் Eagle Pose என்றும் கூறுவார்கள்.

முதலில் நிற்கவும். அதன் பிறகு வலது கையை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி கை முட்டியை மடக்கவும். பின்னர் இடது கையை வலது கைக்கு அடியில் கொண்டு வந்து அதனை வளைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும்.

இடது கால் முட்டியைச் சற்று வளைக்கவும். வலது காலை உயர்த்தி இடது காலின் மேல் வைக்கவும். அதாவது, வலது தொடை இடது தொடையின் மீது இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது காலைச் சுற்றி கொண்டு வரவும். இந்த ஆசனத்தை 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். கால் மற்றும் கை மாற்றி மீண்டும் செய்யவும்.

3. உட்டனாசனம் :

uttanasana benefits in tamil

இந்த உட்டனாசனமும் நின்று செய்யும் ஆசனங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆசனம் செய்வதன் மூலம் உடலின் தோற்றத்தை பலப்படுத்தும் மேலும் முழங்கால் மற்றும் மூட்டுக்களை புத்துணர்ச்சிப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இந்த ஆசனம் கணுக்கால் மற்றும் தொடைகளையும் வலிமைபடுத்தவும் உதவுகிறது.

இந்த ஆசனத்தை நின்ற படி உங்கள் தலையை பாதத்தை தொடுங்கள். இரு கைகளையும் பின் பக்கம் காலை பிடித்தவாறு வைக்க வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

4. மலாசனம் :

malasana pose benefits in tamil

மலாசனம் இந்த ஆசனத்தை வைத்து தான் மலச்சிக்கலை தீர்வுக்கு கொண்டு வரலாம். இதன் பெயரிலே இந்த ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்கிற முறையும் தரப்பட்டுள்ளது. நீங்கள் முழுதாக உட்காராமல் பாதி அமர்ந்த நிலையில் உட்கார வேண்டும். பின்பு வணக்கம் கூறுவது போல் கைகளை வைத்து கொள்ளவும். சுருக்கமாக சொன்னால் மலம் கழிப்பதற்கு அமரும் நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். 

இந்த மலாசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது பாதங்கள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் நன்கு இறுகி வலிமை அடையவும் உதவுகிறது. 

இதையும் படியுங்கள் => கண்பார்வை அதிகரிக்க யோகாசனம்..!

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉யோகா