கீழ் முதுகு வலி நீங்க இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்.!

Advertisement

Yoga For Lower Back Pain in Tamil

முதுகு வலி என்பது முதுகெலும்பில் உள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் ஒரு விதமான வலியாகும். இதை பின் கழுத்து வலி, மேல் முதுகு வலி, கீழ் முதுகு வலி, வாலெலும்பு வலி என்று பிரிக்கலாம். ஆண்களை விட பெண்களுக்கு தான் முதுகு வலி அதிகமாக தோன்றுகிறது. முதுகு வலியை போக்க பல வலிகள் உள்ளது. அதிகமானோர் முதுகு வலியை போக்க மாத்திரைகளையும், தைலத்தையும் தான் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மற்றொரு வழியும் உள்ளது. அதுதான் யோகாசனம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கீழ் முது வலியை போக்க என்ன யோகா செய்ய வேண்டும்.? என்பதை தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.

நௌகாசனம்:

நௌகாசனம்

பயன்கள்:

நௌகாசனம் “படகு யோகா போஸ்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகாவை செய்வதன் மூலம் கீழ் முதுகு வலி நீங்குவதுடன் உடலை சோம்பலின்றியும் வைத்து கொள்ளமுடியும்.

செய்யும் முறை:

முதலில் தரையில் படுத்து தனது இரு கைகள் மற்றும் கால்களை நேராக நீட்டி கொள்ளவும்.

பிறகு, உடலை வளைக்காமல் இரு கால்களை மட்டும் மேல்நோக்கி தூக்கி கொள்ளவும்.

அதனை செய்த பின்பு, இடுப்பு பகுதியை உயர்த்தி கீழ் இடுப்பு பகுதி மட்டும் தரையில் படும்படி அமரவும்.

தினமும் தூங்கும் முன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள்.. அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்..

வசிஷ்டாசனம்:

வசிஷ்டாசனம்

பயன்கள்:

வசிஷ்டாசனம் பக்கவாட்டு பலகை போஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை செய்வதன் மூலம் உடல் ஆற்றலுடன் இருக்கிறது. இதை செய்வதனால் உடல் சூடு அதிகரிக்கும்.

செய்யும் முறை:

முதலில் ஒருபுறமாக படுத்து ஒரு கையை மட்டும் ஊன்றி கொள்ளவும்.

இப்போது கையின் அடிப்பகுதியை நேராக்கி முழு உடலையும் தாங்கி பிடிக்கவும்.

பிறகு, ஒரு கை மற்றும் காலை மேல்நோக்கி உயர்த்தி பிடிக்கவும்.

சவாசனம்:

சவாசனம்

பயன்கள்:

இது மிகவும் எளிமையான ஆசனம். இதனை செய்வதன் மூலம் முதுகை இல்லாமல் இருக்கலாம்.

செய்யும் முறை:

முதலில் முதுகு தரையில் நன்றாக படும்படி நேராக படுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, கண்களை மூடிக்கொண்டு நேர்மறையான எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள்.

இந்த ஆசனத்தை 15 நிமிடத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு இது மட்டும் தான்..

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement