BP-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிய யோகாசனங்கள்!

Advertisement

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா 

நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாசனங்களை உதவுகிறது. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் உள்ளவர்கள் முதல் முதியவர் வரை அனைவருமே இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணம் நமது இதயம் நன்கு ஆரோக்கியத்துடனும், நல்ல பலத்துடனும் இல்லாததுதான். இதய பிரச்சனைகள் ஏற்பட காரணம் மன அழுத்தம் நமது உடலின் நோய்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அதனால் நாம் மன அழுத்தைதை குறைக்க யோகா செய்தால், நமது இதயத்தின் ஆரோக்கியமும் நன்கு மேம்படும். இந்த பதிவில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில யோகாசனங்கள் பற்றி தெரிந்து கொள்ளவோம் வாருங்கள்.

BP -யை கட்டுப்படுத்த உதவும் யோகா:

உயர் இரத்த அழுத்தம் உடலில் பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. BP  காரணமாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

அதிக இரத்த அழுத்தத்திற்கு காரணம் மன அழுத்தம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நமது மன அழுத்தம் கூடும் போது இரத்த அழுத்தமும் கூடுகிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நமது மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க வீட்டிலேயே சில எளிய யோகாகளை முயற்சி செய்யலாம்.

மன அமைதிக்கு யோகா சிறந்தது. மாற்ற அனைத்தையும் விட யோகா ஒரு புத்துணர்ச்சியை வழங்கும்.

மன அழுத்தத்தை குறைக்க எளிய யோகவகைகள் உங்களுக்காக:

பாலாசனா:

பாலாசனா

பாலாசனத்தில் கணுக்கால், தொடை, முழங்கால்கள் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகள் ஸ்ட்ரெட்ச் ஆகின்றது.

பலாசனம் உடலுக்கு ஓய்வை அளிக்கும் ஆசனம் ஆகும்.

பாலாசனமானது முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்து போன்ற பகுதிகளை பலப்படுத்துகிறது.

இந்த ஆசனத்தை மேற்கொள்ளுவதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

சுகாசனம்:

சுகாசனம்

நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும். சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஆசனம் உயர் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லது.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement