Yoga for Thyroid
நம்முடைய உடலில் ஏதோ ஒரு பிரச்சனை அனைவருக்கும் இருந்து கொண்டு தான் உள்ளது. அப்படி பார்த்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நாம் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன் என்றும் கூறு நபர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக பெரும்பாலான நபர்களுக்கு பிரஷர், சுகர் இருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இன்று நிறைய நபர்களுக்கு தைராய்டு தான் அதிகமாக வருகிறது. இந்த தைராய்டு ஆனது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் வந்தால் கூட பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகமாக இந்த பிரச்சனை வருகிறது.
இத்தகைய தைராய்டு அதிகமாக சுரக்கும் போது நம்முடைய உடல் எடை அதுவாகவே அதிகரிக்கிறது மற்றும் தைராய்டு சுரக்கும் அளவு குறையும் போது அதுவும் குறைந்து விடுகிறது. ஆகவே இன்றைய யோகா பதிவில் தைராய்டு படிப்படியாக குறைவதற்கான எளிய யோகாசனத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே.. இதை ட்ரை பண்ணுங்க
தைராய்டு குணமாக யோகா:
இந்த யோகாவை செய்வதற்கு முன்பாக முதலில் விரிக்காயினை விரித்து கொள்ளுங்கள். அதன் பிறகு முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்களின் மனம் மற்றும் செயல்திறனை சமநிலையில் வைத்து விட்டு இரண்டு கண்களையும் மூடி கொள்ளுங்கள். இப்போது நடு விரலை அழுத்தி அதன் மேலே பெரு விரலினால் அழுத்தம் கொடுக்குமாறு வைக்க வேண்டும். அதேபோல் மற்ற மூன்று விரலையும் கீழே பார்க்கும் படி வைத்து விடுங்கள்.
இத்தகைய நிலைக்கு வந்த பிறகு உங்களுடைய கவனத்தை சிதற விடாமல் மூச்சு ஓட்டத்தின் மீது மட்டுமே கவனத்தை வைத்து கொள்ளுங்கள். இதுவே சூன்ய முத்திரை ஆகும்.
சூன்ய முத்திரையை ஒரு நாளைக்கு மூன்று வேளை என 5 நிமிடம் இதை செய்ய வேண்டும். அதேபோல் தைராய்டு குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 வேளை 2 நிமிடம் செய்தாலே போதுமானது.
சூன்ய முத்திரை பயன்கள்:
சூன்ய முத்திரை செய்வதன் மூலம் நம்முடைய உடலில் உள்ள தைராய்டு படிப்படியாக குறைந்து விடும். மேலும் சுரப்பிகளும் சரியாக சுரக்க ஆரம்பித்த குழந்தை பாக்கியம் என்பது உண்டாகும்.
மேலும் இந்த சூன்ய முத்திரை செய்வதன் மூலம் குரல் வலம் நன்றாக இருக்கும். பேசுவதிலும் எந்த பிரச்சனையும் இருக்காது.
அதேபோல் மனதில் காணப்படும் பயத்தினை நீங்க செய்கிறது.