Yoga Poses for Constipation in Tamil
நமது உடல் நலத்திற்கு அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. அதற்கு இன்றைய வாழ்க்கை முறை தான். ஏனென்றால் இன்றைய சூழலில் நமது வாழ்க்கைமுறையானது முறையற்றதாக உள்ளது. இதனால் நமக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.
இந்த மலச்சிக்கல் ஒருவருக்கு உள்ளது என்றால் அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதனால் இந்த மலச்சிக்கலை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். இன்றைய பதிவில் மலச்சிக்கலை உடனடியாக போக்க உதவும் யோகாசனங்களை பற்றி காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
நின்றநிலையில் செய்யப்படும் எளிய யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா
1. வஜ்ராசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு விரிப்பில் மண்டியிடவும். பின்னர் உங்களது குதிகால்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் உட்க்காரவும். உங்களது கைகளை உங்களது தொடை பகுதியில் வைத்து உங்களது முதுகை நேராக வைத்து கொள்ளவும்.
இந்த நிலையில் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே இருங்கள் அதன் பிறகு இயல்புநிலைக்கு வந்துவிடுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்துவருவதால் உங்களுக்கு உள்ள மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் தொப்பை குறையும்.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா
2. கோப்ரா போஸ்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரைவிரிப்பில் கால்களை நேராக நீட்டி குப்புற படுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது தோள்களுக்கு நேராக வைத்து உங்களது உள்ளங்கைகளை தரையில் வைத்து அழுத்தவும்.
பின்னர் உங்களது தோள்கள் மற்றும் உடற்பகுதியுடன் உங்கள் தலை மற்றும் கழுத்தை உயர்த்தவும். இந்த நிலையில் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே இருங்கள் அதன் பிறகு இயல்புநிலைக்கு வந்துவிடுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்துவருவதால் உங்களுக்கு உள்ள மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
உடல் சூட்டை இப்படியெல்லாம் குறைக்க முடியுமா இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |