தலைமுடியை இப்படியெல்லாம் கூட வளர வைக்க முடியுமா..? இது தெரியாம போச்சே..!

Advertisement

Yoga Poses for Hair Growth in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உள்ள பொதுவான பிரச்சனை அதிக அளவு தலைமுடி உதிர்வது தான். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வயதானவர்களுக்கு கூட நீளமான மற்றும் அடர்த்தியான தலைமுடி இருந்தது. அதற்கு காரணம் அவர்களின் உணவு முறை மற்றும் அவர்கள் செய்த உடற் பயிற்சியும் தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள உணவு முறை மற்றும் சரியான உடற் பயிற்சி இல்லாததால் தான் சிறிய வயதிலேயும் கூட தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளது. அதனால் இன்றைய பதிவில் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் சில யோகாசனங்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை செய்து உங்கள் முடி உதிர்வை குறைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 மூட்டுவலி குணமாக இப்படி கூட செய்யலாமா

Yoga Poses for Fast Hair Growth in Tamil:

1. அதோ முக சவனாசனம்:

Yoga Poses for Fast Hair Growth in Tamil

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும். மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும்.

முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனம் செய்வதன் மூலம் உங்களின் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் உங்களின் தலைமுடி நீளமாக வளர உதவும்.

2. உத்தனாசனம்: 

yoga for hair growth in tamil

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும். பின்னர் அப்படியே கீழே நோக்கி வந்து இரண்டு கைகளையும் கால்களை ஒட்டி தரையில் பதிக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக மெதுவாக அதே நேரத்தில் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனம் செய்வதன் மூலம் உங்களின் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் உங்களின் தலைமுடி நீளமாக வளர உதவும்.

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement