Yoga Poses for Knee Pain Relief in Tamil
இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மூட்டு வலி வருகின்றது. ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வயதானவர்களுக்கு கூட மூட்டு வலி ஏற்படவில்லை அதற்கு காரணம் அவர்களின் உணவு முறை மற்றும் அவர்கள் செய்த உடற் பயிற்சியும் தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள உணவு முறை மற்றும் சரியான உடற் பயிற்சி இல்லாததால் தான் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே மூட்டு வலி வருகின்றது. அதனால் இன்றைய பதிவில் மூட்டுவலியை போக்குவதற்கு உதவும் சில யோகாசனங்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை செய்து உங்கள் மூட்டு வலியினை போக்கி கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> நாள்பட்ட மூட்டு வலியை கூட இரண்டு நாட்களில் குணப்படுத்த இந்த டிப்ஸ் மட்டும் போதும்
Yoga Poses for Arthritis in Knees in Tamil:
பத்த கோணாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் நிமிர்ந்து கால்களை நீட்டி அமரவும். பின்னர் கால்களை மடக்கி உடம்பை ஒட்டி கொண்டு வாருங்கள். இரு பாதங்களும் சேர்ந்திருக்கட்டும். குதிகால்கள் உடம்பை ஒட்டி இருக்கட்டும்.
கைகளால் கால் விரல்களை நன்கு கோர்த்து பிடித்து கொள்ளவும். இப்பொழுது இறக்கை போல இரு தொடைப் பகுதியையும் மேலும் கீழுமாக சுமார் 10 முறை அசைத்து பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுங்கள்.
இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் மூட்டு வலி விரைவில் குணமாகிவிடும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்
உட்கட்டாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் நிமிர்ந்து நிற்கவும். பின்னர் முழங்கால், இடுப்பு பகுதியை மடக்கி தோள்பட்டைக்கு இணையாகவும் உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறும் நேராக கைகளை நீட்டி நாற்காலி போல உடலை அமைக்க வேண்டும்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனம் செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பாதம், கணுக்கால், முழங்கால், இடுப்பு, தோள் பட்டை என அனைத்து பாகங்களும் மடக்கி நீட்டுவதால் எல்லா தசைகளும் சீரான ஒரு ரத்த ஓட்டத்தைப் பெற உதவி புரிகின்றது.
அதனால் இந்த யோகாசனத்தை தினமும் காலையும், மாலையும் செய்து வருவதன் மூலம் உங்களின் மூட்டுவலி விரைவில் குணமாகிவிடும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |