Yoga to Reduce Back Pain and Hip Pain in Tamil
யாருக்கு தான் இப்போது முகுதுவலி இல்லாமல் இருக்கிறது சொல்லுங்கள்..! அனைவருக்கும் முதுகுவலி இருக்கிறது. இடுப்பு வலி இருக்கிறது. ஏன் இப்போது அனைவருக்கும் இந்த வலி இருக்கிறது என்றால் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான வேலைகள் இருக்கும். நாம் அனைவருமே சத்துகள் நிறைந்துள்ள பொருட்களை சாப்பிட்டால் மட்டுமே நமக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு வேலைகள் அதிகமாக இருக்கும். உட்கார்ந்து கொண்டே இருப்பது, ஒரு சிலர் நின்று கொண்டே இருப்பார்கள். இதுபோன்றவர்கள் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு முதுகுவலி, இடுப்பு வலி என்று நிறைய இருக்கிறது. இதனை யோகாசனம் செய்து சரி செய்ய முடியும். யோகாசனம் செய்து வலியை குறைக்க முடியும் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
Virabhadrasana Benefits in Tamil:
எலும்புகளுக்கு போதுமான வலிமையை அளிக்க இந்த யோகாசனம் போதுமானதாக உள்ளது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜனுடன் உடலுக்கு வழங்குவதற்குத் தேவையான அட்ரீனல் சுரப்பிகளை நம்முடைய உடலில் அதிகரிப்பதற்கு இந்த யோகாசனம் நன்றாக இருக்கும். முதுகு வலி, மூட்டிகள், கை, கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும். மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் வைத்துக்கொண்டு யோகா செய்யவேண்டும்.
விருட்சாசனம்:
கை, கால்களில் உள்ள தசை நார்கள், வலிமையை அடைய செய்ய உதவும் யோகா இது தான். இந்த யோகாசனத்தை செய்ய கைகளை மேல் பக்கம் நிமிர்த்தி அதை சாமி கும்பிடுவது போல் வைக்கவும். அதற்கு பிறகு வலது கால்களை தூக்கி இடது பக்கம் வைக்கவும். அதாவது மேல் உள்ள படத்தில் உள்ளதை போல் வைத்து சில நிமிடங்கள் அதாவது 30 நிமிடம் வைக்கவேண்டும். அதன் பிறகு மெதுவாக இறக்கி மறுமுறை வேறு கால்களால் செய்யவும்.
தலை முடி வளர்வதற்கு யோகாசனம் 👉👉👉 தலைமுடியை இப்படியெல்லாம் கூட வளர வைக்க முடியுமா..? இது தெரியாம போச்சே
Utkatasana Benefits in Tamil:
இந்த யோகாசனம் செய்வதால் தோள்பட்டை, மூட்டுகளில் வலிமையை ஏற்படுத்தும். அதேபோல் இந்த யோகாசனம் செய்வது எப்படி என்றால் முதலில் உங்கள் வீட்டில் நாற்காலி இருந்தால் அதில் எப்படி உட்கார்வீர்கள். அதேபோல் நாற்காலி இல்லாமல் கைகளை உங்களுக்கு எதிர் பக்கம் நீட்டி அதே போல் சில நிமிடம் அப்படியே விட்டு மெதுவாக நிறுத்தி மறுமுறையும் அதேபோல் செய்யவேண்டும்.
சேதுபந்தாசனா:
இந்த யோகாசனம் ஒரு நோய்க்கான சிகிச்சையாக இருந்து வருகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் ஆசனம் என்றால் இது சேதுபந்தசனா. இது இடுப்பு, தோள் போன்றவற்றில் நல்ல உறுதியை அளிக்கும். இடுப்பு வலி அடிக்கடி ஈடுபடுபவர்களுக்கு இந்த யோகா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்👉👉 மூட்டுவலி குணமாக இப்படி கூட செய்யலாமா
சந்தோலனாசனா:
இந்த யோகாவை அதிகமாக ஜிம் செல்பவர்கள் செய்வார்கள். இது கை, கால், மூட்டிகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். முக்கியமாக உள்ளங்கைகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். இது ஒரு 5 நிமிடம் அப்படியே நிற்க வேண்டும். இதை செய்வதால் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் உறுதியை அளிக்கும்.
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |