தொப்பை குறைய சாப்பிட்ட பிறகு இந்த யோகாவை செய்யுங்கள் போதும்.!

Advertisement

Yoga To Reduce Belly Fat

இக்காலத்தில் பெரும்பாலானோருக்கு தொப்பை வருகிறது. சொல்லப்போனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் தொப்பை வருகிறது. இதனால் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஒழுங்கற்ற செரிமான முறை, தவறான உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்களால் தொப்பை ஏற்படுகிறது. எனவே, அதனை தடுக்கும் வகையில் நாம் சில யோகாக்களை செய்ய வேண்டும். தொப்பை உள்ளவர்கள், இந்த யோகாவினை நீங்கள் சாப்பிட்ட பிறகு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓகே வாருங்கள், தொப்பையை குறைக்க செய்யக்கூடிய யோகாவினை பின்வருமாறு பார்க்கலாம்.

How To Reduce Belly Fat by Yoga:

தொப்பையை குறைக்க வஜ்ராசனம்:

 தொப்பை குறைய யோகாசனம்

முதலில் உங்களுக்கு வசதியான யோகா மேட்டை விரித்து கொள்ளுங்கள்.

இப்போது, தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.

முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களை ஒன்றாக நீட்டி பாதங்களை நேராக வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் தொடைகளை கால்கள் தாங்கியவாறு  இருக்க வேண்டும். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொடமாறு இருக்க வேண்டும்.

உங்கள் கைகளை முழங்கால்களில் வைத்து, முதுகை நிமிர்த்தி நேராக உட்காருங்கள்.

இந்நிலையில் மூச்சை மெதுவாக உள்ளேயும் வெளியேயும் இழுத்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் 5 முதல் 10 நிமிடங்கள் செய்யலாம்.

உடல் சூட்டை இப்படியெல்லாம் குறைக்க முடியுமா..? இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!

எச்சரிக்கைகள்:

பின்வருமாறு கூறப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் இந்த யோகாவினை செய்ய கூடாது.

  • முதுகுத்தண்டில் பிரச்சனை உள்ளவர்கள்
  • முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் முழங்காலில் பிரச்சனை உள்ளவர்கள்.
  • குடல் சம்மந்தப்பட்ட [பிரச்சனைகள் உள்ளவர்கள்.

வஜ்ராசனத்தின் பயன்கள்:

  • செரிமானம் மண்டலத்தை நன்றாக இயங்க வைக்கிறது.
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • நெஞ்செரிச்சல் மற்றும் வாயு பிரச்சனையை நீக்குகிறது.
  • மாதவிடாய் வலியை போக்க வல்லது.
  • இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • முதுகு வலியை குறைக்க உதவுகிறது.

உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு யோ

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 
Advertisement