குறைந்த முதலீட்டில் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து நல்ல லாபம் பெறலாம்

Advertisement

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஏலக்காய் மொத்த வியாபாரம் தொழில்..! | Cardamom Export Business 

புதிதாக தொழில் செய்ய விரும்பும் நண்பர்கள் அனைவருக்கும் கனிவான வணக்கங்கள். இன்றைய காலா கட்டத்தில் சொந்தமாக எதாவது தொழில் செய்தால் தான் நமது வாழ்க்கையை ஓரளவாவது நிம்மதியாக வாழமுடியும். இதன் காரணமாகவே பலர் எதாவது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றன. இவர்களுடைய எண்ணங்களுக்காவே நமது பொதுநலம்.காம் பதிவில் பல வகையான பிசினஸ் ஐடியாக்களை பதிவு செய்து வருகின்றோம்.

அந்த பதிவுகளை படித்து தங்களுக்கு அதில் எது மாதிரியான தொழில் செய்ய விருப்பம் இருக்கின்றது அதனை செய்து வெற்றி பெறுங்கள். சரி இந்த பதிவில் குறைந்த முதலீட்டில் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து நல்ல லாபம் பெற சில வழிகளை இங்கு நாம் படித்தறிந்து கொள்வோம் வாங்க.

ஏலக்காய் மொத்த வியாபாரம் – Cardamom Wholesale Business in Tamil:

  • ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பொருள். மிகவும் வாசனையாக இருக்கும். இந்தியாவில் இதனை அதிகளவு பயன்படுத்திவருகின்ற. மேலும் இந்த ஏலக்காவை வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற.
  • ஆகவே நீங்கள் இந்த ஏலக்காயை மொத்தமாக வாங்கி விற்பனை செய்குவதன் மூலம் நல்ல லாபம் பெறமுடியும்.
  • சரி இந்த ஏலக்காய் இந்தியாவில் எந்த எந்தெந்த இடங்களில் மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் வாங்க முடியும் என்ற விவரங்களை கீழ் காண்போம் வாங்க.
பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..!

ஏலக்காய் கிடைக்கும் இடங்கள்:

  • தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் ஏலக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது எனவே நீங்கள் அங்கு சென்று மொத்தமாக இந்த ஏலக்காயை வாங்கி கொள்ளலாம்.
  • அதேபோல் கேரளா மாவட்டத்தில் உள்ள வண்டன்மேடு என்ற ஊரில் ஏலக்காய் அதிகாவு சாகுபடி செய்யப்படுகிறது இந்த இரண்டு இடங்களில் நீங்கள் எங்கு ஏலக்காயை வாங்க நினைக்கின்றிர்களோ அங்கு சென்று மொத்தமாக வாங்கி கொள்ளலாம்.
  • இந்த ஏலக்காய்களை அளவின் அடிப்படியில் விலை நிலவரம் மாறுபடுகின்றது. அதாவது சிறியளவில் உள்ள ஏலக்காய்களை ஒரு விலையிலும் 8 mm அளவு கொண்ட ஏலக்காய்களை ஒரு விலையிலும் விற்பனை செய்கின்றன.
  • டீலர்ஷிப் மூலம் நீங்கள் இதனை வாங்குவது சிறந்தது என்று கூறப்படுகிறது.

சந்தை வாய்ப்புகள்:

  • நீங்கள் மொத்தமாக வாங்கிய ஏலக்காயினை 50 கிராம், 100 கிராம், 250 கிராம், 500 கிராம் என்று பேக்கிங் செய்து கடைகளுக்கு சப்லை செய்யலாம்.
  • அதேபோல் சிறு சிறு பேட்டி கடைகளில் 5 கிராம், 10 கிராம் ஏலக்காய் பாகேடுகள் நன்கு விற்பனை ஆகும். ஆகவே அவர்களிடம் ஆர்டர் பெற்று நீங்கள் ஏலக்காய்களை விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் பெறமுடியும்.
குறைந்த முதலீடு போதும்..! அதிக வருமானம் தரும் ஆரோக்கியா பால் டீலர்ஷிப் பிசினஸ்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil Ideas in Tamil 
Advertisement