வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..!

Updated On: October 3, 2023 12:38 PM
Follow Us:
குடிசைத்தொழில்
---Advertisement---
Advertisement

குடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..!

குடிசைத்தொழில் (kudisai tholil):- தக்காளியை விதைக்கும் விவசாயிகளுக்கும் சரி, அதனை பயன்படுத்தும் பயனர்களுக்கும் சரி இனி கவலை வேண்டாம். எதற்காக கவலை வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால். தக்காளி அதிக விலையில் விற்பனை செய்யும் போது யாரும் தக்காளியை வீணாக்கமாட்டோம். ஆனால் குறைந்த விலையில் விற்பனையாகும் போது கண்டிப்பாக வீணாக்குவோம். எனவே அவற்றை வீணாக்குவதற்கு பதிலாக ஊறுகாயாகவோ அல்லது ஜாமாகவோ செய்தால் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இருக்காது.

இவற்றை குடிசைத்தொழில் (kudisai tholil) செய்யலாம். விற்பனை மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

சரி குடிசைத்தொழிலில் தக்காளி ஊறுகாயும், ஜாமும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

newசணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் ?

குடிசைத்தொழில் – தக்காளி ஊறுகாய்:

maxresdefault

தேவையான பொருட்கள்:

  1. நன்றாகப் பழுத்தத் தக்காளி – ஒரு கிலோ,
  2. மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
  3. வெந்தயம் – 1 ஸ்பூன்,
  4. ரீஃபைண்ட் ஆயில் – 250 மில்லி,
  5. பூண்டு – 20 பல்,
  6. பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்,
  7. கடுகு – 1 ஸ்பூன்,
  8. உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,
  9. உப்பு – தேவையான அளவு.

சரி வாங்க குடிசைத்தொழில் (kudisai tholil) மூலம் தக்காளி ஊறுகாய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்..!

newபுதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த பட்டியல்:-

குடிசைத்தொழில் – தக்காளி ஊறுகாய் செய்முறை:

தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும்.

இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும்.

நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை தாளித்து, பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும்.

இது சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.

குடிசைத்தொழில் – தக்காளி ஜாம்:

tomato-jamதேவையான பொருட்கள்:

  1. தக்காளி பழக்கூழ் – ஒரு கிலோ.
  2. சர்க்கரை – 750 கிராம்.
  3. சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி.

சரி வாங்க குடிசைத்தொழில் (kudisai tholil) மூலம் தக்காளி ஜாம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்..!

குடிசைத்தொழில் – தக்காளி ஜாம் செய்முறை:

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்).

கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும்.

அந்த பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும்.

இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும்.

சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும் போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.

குடிசைத்தொழில் – ஊறுகாய் விற்பனை:

குடிசைத்தொழில் பொறுத்தவரை பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை, விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்.

newசுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை