வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடிசைதொழில் – நூடுல்ஸ் தயாரிப்பு முறை !!!

Updated On: December 4, 2021 9:19 AM
Follow Us:
நூடுல்ஸ் தயாரிப்பு
---Advertisement---
Advertisement

நூடுல்ஸ் தயாரிப்பு முறை ..!

நூடுல்ஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வெளுத்து கட்டுவாங்க. எனவே நூடுல்ஸ் தயாரிப்பு முறைமூலம் அதிக லாபம் பெறலாம்.

மிக குறைந்த முதலீட்டில் குடிசை தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்யலாம் நூடுல்ஸ் தயாரிப்பு விற்பனை மூலம் அதிக லாபமும் பெறலாம்.

பேக்கரி தொழில் தொடங்க வேண்டுமா.? அப்போ இந்தாங்க முழு விவரம்..!

நூடுல்ஸ் தயாரிப்பு முறை ..!

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும்.

மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.

அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும்.

அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார்.

பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும்.

கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான்.

சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும்.

தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..!

நூடுல்ஸ் தயாரிப்பு முறைக்கு – தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:

நூடுல்ஸ் தயாரிப்பு முறை பொறுத்தவரை மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும்.

கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு:

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம்,
வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம்,
50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம்.
மற்ற பயன்படுத்தும் சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.

கட்டிட அமைப்பு:

நூடுல்ஸ் தயாரிப்பு பொறுத்தவரை இயந்திரங்களை நிறுவ, பொருட்களை இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம் வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்திக்கான செலவு:

நூடுல்ஸ் தயாரிப்பு பொறுத்தவரை ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம்.

கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ.20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ.7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ.3 ஆயிரம்) என ரூ.1.50 லட்சம் ஆகும்.

தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்:

நூடுல்ஸ் தயாரிப்பு முறையில் 15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும்.

சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு:

நூடுல்ஸ் தயாரிப்பு முறையில் மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், பிராண்ட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்க தயாராக இருக்கின்றன.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த பட்டியல் 2019

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil