வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்

Updated On: April 29, 2022 6:35 AM
Follow Us:
தயாரிப்பு தொழில்
---Advertisement---
Advertisement

சிறு தொழில் – பிரட் தயாரிப்பு தொழில் 

கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையாகத்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.

ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.

மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும்.

இதனோடு அனுபவம் மிக்க மாஸ்டர்களைக் கொண்டு பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.

newபேக்கரி தொழில் தொடங்க வேண்டுமா.? அப்போ இந்தாங்க முழு விவரம்..!

சரி வாங்க பிரட் தயாரிப்பு தொழில் பற்றி விரிவாக படித்தறிவோம் வாங்க..!

சிறு தொழில் – பிரட் தயாரிப்பு தொழில் முழுவிவரங்கள்..!

அனுமதி வாங்க வேண்டும்:

பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும்.

மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

பிரட் தயாரிப்பு தொழில் – கட்டிட அமைப்பு:

ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும்.

இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும்.

நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும்.

உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

பிரட் தயாரிப்பு தொழில் இயந்திரங்கள்:

இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும்.

அசாம், ஹைதராபாத், புது டில்லி போன்ற இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

பிரட் தயாரிப்பு – இதர செலவுகள்:

பிரட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை  ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

மேலும் இதனுடன் 20 HP மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

newசுயதொழில் – கேன் வாட்டர் தொழில் !!!

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இத்தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும்.

மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.

சிறு தொழில் – செலவுகள்:

பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

சிறு தொழில் – முதலீடு:

பிரட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை  இந்த தொழிலை தொடங்குவதற்கு சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.

சிறு தொழில் – சந்தை வாய்ப்புகள்:

பிரட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாத நிலை ஏற்படும் போது பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறு மக்கள் பழகி வருகின்றனர்.

இதனால் நகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

இந்த தொழிலின் பிளஸ்:

பிரட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங்களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.

தற்போது குழந்தைகளின் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது.

அதனால் பர்த்-டே கேக்குகளுக்கான ஆர்டர்களை வாங்கி, செய்து கொடுக்கலாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.

இந்த தொழிலின் மைனஸ்:

பிரட் தொழில் பொறுத்தவரை தயாரிக்கப்படும் பிரட் வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். தேவையை பொறுத்து தயாரிப்பது மிகவும் முக்கியம்.

பிரட் தயாரிப்பு தொழில் செய்ய வேலையாட்கள்:

இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை.

அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.

newபுதிதாக என்ன தொழில் செய்யலாம் – சிறந்த சிறு தொழில் பட்டியல்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!