வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஊதுவத்தி தயாரிப்பது எப்படி ..? குறைந்த முதலீட்டில் ஒரு கைதொழில்

Updated On: October 18, 2025 5:15 PM
Follow Us:
ஊதுவத்தி தயாரிப்பு
---Advertisement---
Advertisement

கைதொழில் – ஊதுவத்தி தயாரிப்பு | Incense Sticks Business Plan in Tamil 

ஊதுவத்தி தொழில் கைதொழிலில் சிறந்த தொழிலாக விளங்குகிறது ஊதுவத்தி தயாரிப்பு இவற்றில் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.இவற்றில் பலவகையான மணம் கமழும் பத்திகள் இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் தயாரிக்கும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.  வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பு.சரி வாங்க ஊதுவத்தி தயாரிப்பது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

ஊதுபத்தி என்பது அகர்பத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஊதுபத்தி என்பது, மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள் ஆகும். இதன் காரணமாகவே இதனை பூஜை முதல் வீட்டின் வாசனை மற்றும் நேர்மறை எண்ணம் பெறுக வீடு முதல் தொழில் செய்யும் இடம் வரை கொளுத்தி வைப்பார்கள். இது இயற்கை மற்றும் ஒரு சில செயற்கை வாசனை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்டுகிறது. இதனை செய்ய பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை. அதனால் குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் நபர்களுக்கு ஊதுபத்தி தொழில் ஒரு நல்ல தீர்வாக அமையும்.

சுயதொழில் – விபூதி தயாரிப்பு..! குறைந்த முதலீடு அதிக லாபம்

ஊதுவத்தி தொழில் – வழவழப்பான பலகை:

  • ஊதுவத்தி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை.
  • சுமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.

ஊதுவத்தி தொழில் – மூங்கில் குச்சிகள்:

  • ஊதுவத்தி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை. இவைகள் தயாரிப்பு பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும்.

1. சந்தன ஊதுவத்தி தயாரிப்பது எப்படி :

ஊதுவத்தி தொழில் – தேவைப்படும் பொருட்கள்:

  1. சந்தன பவுடர் – 500கிராம்
  2. சாம்பிராணி – 500கிரம்
  3. வெட்டிவேர் – 200கிராம்
  4. கிச்சிலிக் கிழங்குப் பொடி – 100 கிராம்
  5. புனுகு – 2 கிராம்
  6. கஸ்தூரி – 2 கிராம்
  7. பன்னீர் – 100மில்லி

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

ஊதுவத்தி தயாரிப்பு தொழில் 

  • ஊதுவத்தி தயாரிப்பு தொழில் முறை வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும்.
  • அம்மியில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.
  • கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  • மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும்.
  • ஒரு மூங்கில் குச்சியின் அடிப்பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு, தள்ளி மணை மீது வைத்து கலவை, குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும்.
  • கலவைப் பொருள், குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும்.
  • ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும்.
  • பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.
  • பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை நிழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள்.
  • இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும்.
  • குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தேய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தேய்ப்பர்.
  • இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பாகத்தைத் தனியே காட்டும்.
  • வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள், தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 10, 50, 100 வத்திகளை மெல்லிய எண்ணெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம்.
  • இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம் அல்லது நீங்களே நேரிடையாக பொதுமக்களிடம் விற்கலாம்.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த சிறு தொழில் பட்டியல்

2. கதம்ப சந்தன ஊதுவத்தி தயாரிப்பது எப்படி

தேவைப்படும் பொருட்கள்:

  1. சந்தனப் பவுடர் – 300 கிராம்
  2. சாம்பிராணி – 100 கிராம்
  3. மட்டிப்பால் – 75 கிராம்
  4. மைனாலக்கிடிப் பட்டை – 150 கிராம்
  5. கிச்சிலிக்கிழங்கு – 75 கிராம்
  6. கோரைக் கிழங்கு – 75 கிராம்
  7. வெட்டிவேர் – 30 கிராம்
  8. விளாமிச்சம்வேர் – 30 கிராம்
  9. அன்னசிப் பூ – 30 கிராம்
  10. ரோஜாப் பூ – 30 கிராம்
  11. இலவங்கப்படை – 30 கிராம்
  12. இலவங்கம் – 10 கிராம்
  13. கார்போக அரிசி – 30 கிராம்
  14. ஜாதிப் பத்திரி – 10 கிராம்
  15. கிளியூரல்பட்டை – 30 கிராம்
  16. ஏலக்காய் – 30 கிராம்
  17. மரிக்கொழுந்து – 30 கிராம்
  18. தவனம் – 30 கிராம்
  19. ஜாதிக்காய் – இரண்டு

ஊதுவத்தி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை இதற்கு பெரிய மூலதனம் தேவையில்லை.

ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்தி தயாரிப்பு மூலம் நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சிறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.

ஊதுவத்தி தயாரிப்பு தொழில் 

  • ஊதுவத்தி தயாரிப்பு தொழில் முறை சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும்.
  • சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள்.
  • சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள்.
  • எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும், மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள்.
  • பின்பு மறுநாள் காலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!