கைதொழில் – சத்து மாவு தயாரிப்பு !!!

சத்து மாவு தயாரிக்கும் முறை

கைதொழில் – சத்து மாவு தயாரிக்கும் முறை !!!

சத்து மாவு தயாரிக்கும் முறை :- பப்ஸ், பீசா போன்ற மேற்கிந்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்து மாவு தயாரிக்கும் முறையில் நல்ல லாபம் பார்க்கலாம்.

newசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

 

சரி வாங்க சத்து மாவு தயாரிக்கும் முறை பற்றி இப்போது நாம் காண்போம்..!

சத்து மாவு விற்பனை – தேவையான பொருட்கள்:

 1. ராகி – 2 கிலோ
 2. சோளம் – 2 கிலோ
 3. கம்பு – 2 கிலோ
 4. பாசிப்பயறு – அரை கிலோ
 5. கொள்ளு – அரை கிலோ
 6. மக்காசோளம் – 2 கிலோ
 7. பொட்டுக்கடலை – ஒரு கிலோ
 8. சோயா – ஒரு கிலோ
 9. தினை – அரை கிலோ
 10. கருப்பு உளுந்து – அரை கிலோ
 11. சம்பா கோதுமை – அரை கிலோ
 12. பார்லி – அரை கிலோ
 13. நிலக்கடலை – அரை கிலோ
 14. அவல் – அரை கிலோ
 15. ஜவ்வரிசி – அரை கிலோ
 16. வெள்ளை எள் – 100 கிராம்
 17. கசகசா – 50 கிராம்
 18. ஏலம் – 50 கிராம்
 19. முந்திரி – 50 கிராம்
 20. சாரப்பருப்பு – 50 கிராம்
 21. பாதாம் – 50 கிராம்
 22. ஓமம் – 50 கிராம்
 23. சுக்கு – 50 கிராம்
 24. பிஸ்தா – 50 கிராம்
 25. ஜாதிக்காய் – 2
 26. மாசிக்காய் – 2

சரி வாங்க சத்து மாவு தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..!

newதேனீ வளர்ப்பு முறை – முழு விளக்கம்..!

சத்து மாவு தயாரிக்கும் முறை:-

சத்து மாவு தயாரிக்கும் முறை ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும்.

அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.

மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.

அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.

12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள் சாதாரணமாக மல்லிகைக் கடைகளில் கிடைக்கும்.

தனியாக அறைகள் ஒன்றும் தேவையில்லை வீட்டில் இருந்தே தயார் செய்யலாம்.

வீட்டில் மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. எனவே மாவு மில்லில் அரைப்பதுதான் மிகவும் நல்லது.

சத்து மாவு விற்பனை –  உற்பத்தி செலவு:

சத்து மாவு தயாரிப்பு முறை பொறுத்தவரை தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950.

மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

 சத்து மாவு தயாரிப்பு – வருவாய்:

சத்து மாவு தயாரிக்கும் முறை பொறுத்தவரை 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440/- 25 நாளில் வருவாய் ரூ.36,000/- செலவு போக லாபம் ரூ.11,000/-

சந்தை வாய்ப்பு:

சத்து மாவு தயாரிக்கும் முறை பொறுத்தவரை சந்தைவாய்ப்பில் அதிக இலாபம் பெறலாம் குறிப்பாக மல்லிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம்.

சத்துமாவை தற்போது மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை.

newசுயதொழில் – நல்ல லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு !!!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil