வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுயத்தொழில் – செல்லோ டேப் தயாரிப்பு !!! Cello Tape Making..!

Updated On: February 23, 2022 12:45 PM
Follow Us:
செல்லோ டேப் தயாரிப்பு
---Advertisement---
Advertisement

சுயத்தொழில் – செல்லோ டேப் தயாரிப்பு (How to make cello tape)!!!

புதிதாக தொழில் தொடங்க ஆரம்பிக்கும் தொழிலாளர்களுக்கு, செல்லோ டேப் தயாரிப்பு ஒரு சிறந்த தொழிலாகும். இந்த சுயத்தொழிலில் அதிக சந்தைவாய்ப்புகள் உள்ளது. அதாவது ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் அதிக லாபமும் பெற இயலும்.

ஸ்டேஷனரி ஷாப் தொழில் மூலம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்..!

சரி வாங்க செல்லோ டேப் தயாரிப்பு (How to make cello tape) முறை பற்றி இப்போது நாம் காண்போம்..!

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் முதலீடு:

செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை ஆண்டுக்கு 2.70 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் தேவையான பொருட்கள்:

செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம், அடிசிவ். இந்த இரண்டும்தான் முக்கியமான மூலப் பொருட்கள் ஆகும்.

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:

போபால் மற்றும் சென்னையில் இந்த மூலப் பொருட்கள் கிடைக்கும். மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை, அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் கட்டிட அமைப்புகள்:

செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை இயந்திரங்களை பொருத்துவதற்கு, தயார் செய்த செல்லோ டேப்பை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என்று 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும்.

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் தேவைப்படும் இயந்திரங்கள்:

கோட்டிங் இயந்திரம், ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (slicing) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள்.

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் இயந்திரங்களின் விலை:

கோட்டிங், ஸ்லைட்டிங் மற்றும் ஸ்லைசிங் இயந்திரம் இவை மூன்றும் எட்டு லட்ச ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். அதற்கு அதிகமான விலையிலும் இயந்திரங்கள் கிடைக்கின்றன.

அடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..!

சுயதொழில் – செல்லோ டேப் தொழில் இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்:

இயந்திரங்கள் அனைத்தும் சென்னை மற்றும் புதுச்சேரியில் கிடைக்கிறது.

செல்லோ டேப் தயாரிப்பு முறை (How to make cello tape):

மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும்.

இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடும்.

காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம்.

செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் கட் செய்து கொடுத்துவிடலாம்.

மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும்.

12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.

இந்த செல்லோ டேப் தயாரிப்பு தொழிலின் பிளஸ்:

பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில்களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.

இந்த செல்லோ டேப் தயாரிப்பு தொழிலின் மைனஸ்:

மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 சிறந்த சிறு தொழில்கள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil