சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!

சாம்பிராணி தயாரிப்பு

கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!

சாம்பிராணி தயாரிப்பு :- நெருப்புத் துண்டுகளில் சாம்பிராணித் தூள் தூவி புகைப் போடும் பழக்கம் இன்று கிராமங்களில் கூட மறைந்து அதற்கு பதில் இப்போது கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் வந்துவிட்டன. அதிலும் பாரபட்சமின்றி அனைத்து மதத்தினரும் பூஜை செய்ய கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்துகின்றனர். என்பதால் சுயமாக தொழில் துவங்கள் நினைப்பவர்கள் இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.

சிறு தொழில் – குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில் ..!

சரி வாங்க இந்த பகுதில் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு முறை பற்றி தெளிவாக படித்தறிவோம்..!

கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு முறை:

முதலில் குறிப்பிட்ட அளவு கரித்தூள், மரத்தூள், நிக்கிட், லோபன் பவுடர் மற்றும் கலர் பவுடர் எனப் பல பொருட்களுடன் நறுமணம் சேர்த்து கலவை இயந்திரத்தில் நன்றாக கலக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள டையில் நிரப்ப வேண்டும்.

பிறகு ஹைட்ராலிக் உபயோகித்து அந்த டையில் உள்ள துளைகளில் நிரம்பியுள்ள பவுடர் இறுக்கப்பட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியாக மாறும். அவை டையில் இருந்து மறுபடியும் வெளியேற்றப்படும்.

ஒருமுறை பிரஸ் செய்தால் 60 முதல் 120 சாம்பிராணிகள் வரை கிடைக்கும்.

கப் சாம்பிராணி தயாரிக்க சாம்பிராணி டையை பொருத்தி இயந்திரத்தை உபயோகிக்க வேண்டும்.

இதில் ஒரே நேரத்தில் 25 கப் சாம்பிராணிகள் தயாரிக்கலாம். 12 சாம்பிராணிகளை ஒரு பாக்கெட்டில் சிறிய கவர்களில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். அவை 144 பாக்கெட்களாக வைத்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு – தேவைப்படும் இயந்திரங்கள்:-

 1. 100 piece of computer sambrani Hydraulic Machinery – Rs.2.36 Lakhs
 2. Blender Machine – Rs.0.42 Lakhs
 3. Cup Making Die 36 Numbers – Rs.0.60 Lakhs
 4. Dryer – Rs.1.50 Lakhs

மூலப்பொருட்கள்:

 • டஸ்ட் பொடி
 • ஜிங்கிட் பவுடர்
 • தேவையான வண்ணம்
 • லோபான் பவுடர்
 • பேக்கிங் பொருட்கள்

மூலப்பொருட்களின் தேவை

 • ஒரு மாதம் தேவையான டஸ்ட் பொடி 2500 கிலோ – ரூ.90,000/-
 • ஒரு மாதம் தேவையான ஜிங்கட் பவுடர் 250 கிலோ – ரூ. 16750/-
 • வண்ணப் பவுடர் ஒரு மாதத்திற்கு 500 கிலோ – ரூ. 15,000/-
 • லோபான் பவுடர் ஒரு மாதத்திற்கு 50 கிலோ – ரூ. 10,000/-
  மொத்தம் – ரூ. 1,31,250/-

பேக்கிங் செலவு

1 கிலோ மூலப்பொருட்களில் இருந்து 1.5 டஜன் பெட்டிகள் கிடைக்கும்.

ஒரு பெட்டியில் 12 சிறிய காட்டன் பெட்டிகள் இருக்கும். ஒரு டஜன் பெட்டி கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கு தேவையானவை

சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!

1 x 12 x 12 Boxes – 144 Boxes

 • ஒரு பெட்டி விலை – ரூ.0.90 பைசா
  1 கிலோ பவுடர் மூலம் 1.5 டஜன் பெட்டிகள்
  2850 கிலோ பவுடரில் இருந்து 4275 டஜன் பெட்டிகள்
  4275 x 144 x 0.90 – Rs.0.56 லட்சம்
 • Corrugated box packing Rs.1/Doz – Rs.0.04 லட்சம்
 • பேக்கிங் செலவு மொத்தமாக – ரூ.0.60 லட்சம்

நடைமுறை மூலதனம்

 • மூலப்பொருட்கள் விலை – ரூ. 1.31 லட்சம்
 • பேக்கிங் பொருட்கள் – ரூ.0.60 லட்சம்
 • மொத்தம் – ரூ.1.91 லட்சம்

வேலையாட்கள் சம்பளம்

 • சூப்பர்வைசர் 1 : ரூ.8,000
 • பணியாளர் 6 x 5000 : ரூ.30,000
 • தொழில்நுட்பப் பணியாளர் 1: ரூ.6,000
 • விற்பனையாளர் : ரூ.6,000
  மொத்த சம்பளம் : ரூ.50,000

மொத்த செலவு

 • மூலப்பொருட்கள் : ரூ.1,30,000
 • பேக்கிங் மெட்டீரியல் : ரூ. 60,000
 • மின்சாரம் : ரூ. 7,000
 • சம்பளம் : ரூ.50,000
 • இயந்திரப் பராமரிப்பு : ரூ.5,000
 • மேலாண்மைச் செலவு : ரூ.5,000
 • வாடகை : ரூ.10,000
 • விற்பனை செலவு : ரூ.10,000
 • தேய்மானம் 15% : ரூ.6,000
 • கடன் வட்டி : ரூ.07,000
 • கடன் தவணை (60 தவணை) : ரூ.11,000
  மொத்தம் : ரூ.3,01,000

லாபம் விவரம்

 • மொத்த வரவு : ரூ.3,84,000
 • மொத்த செலவு : ரூ.3,01,000
 • லாபம் : ரூ. 83,000

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு எப்போதுமே அதிக தேவை இருக்கும் என்பதால், சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு நல்ல லாபத்தை தரும் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு . சாம்பிராணி தயாரிப்பு பயிற்சியோடு முயற்சியும் இருந்தால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் இந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழிலில்..!

புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த பட்டியல் 2019..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.