பனை கருப்பட்டி தயாரிப்பு (Panai Karupatti) | பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை:
பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை: பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.
கிராமத்தில் கருப்பட்டி காபி என்றாலே தனி சிறப்புதான். கருப்பட்டில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்து இருப்பதால் இவற்றை நகரத்தில் வசிக்கும் மக்களும் இப்போது அதிகளவு பயன்படுத்துகின்றனர். சுயதொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தொழிலாகும். இவற்றின் தேவை மக்களுக்கு அதிகம் உள்ளதால், கருப்பட்டி தயாரிப்பு (palm jaggery) மூலம் அதிக லாபம் பெறலாம்.
சரி வாங்க கருப்பட்டி தயாரிப்பு முறை பற்றி தெளிவாக படித்தறிவோம்..!
சணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் ? |
பனை கருப்பட்டி தயாரிப்பு (Panai Karupatti) – தேவையான பொருட்கள்:
- பனை பதநீர்,
- சுக்கு, மிளகு,
- திப்பிலி.
கட்டிட அமைப்பு:
பதநீர் காய்ச்ச, கருப்பட்டிபாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை.
முதலீடு:
கருப்பட்டி தயாரிப்பு (panai karupatti) தொழில் பொறுத்தவரை முதலீடாக கட்டிட அட்வான்ஸ் ரூ.20,000. கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ரூ.600, அச்சுப்பலகை 6 அடி நீளம் ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை.
பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை – உற்பத்தி செலவு:
கருப்பட்டி தயாரிப்பு (palm jaggery) தொழில் துவங்க தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட்டர் பதநீர் வீதம், மாதம் 26 நாளில் 2,600 கிலோ பனை, சுக்கு, கருப்பட்டி தயாரிக்க 19,500 லிட்டர் பதநீர் தேவை.
லிட்டர் ரூ10 வீதம் பதநீருக்கு மட்டும் மாதம் ரூ1.95 லட்சம், பிளாஸ்டிக் கவர் ரூ110, லேபிள் ரூ25, செலோ டேப், பார்சல் பெட்டி, பேக்கிங் கயிறு உட்பட ரூ50. உற்பத்திக் கூலி தினசரி 5 பேருக்கு தலா ரூ150 வீதம், மாதம் ரூ19,500. இட வாடகை ரூ2,000 என உற்பத்திச் செலவுக்கு ரூ2.16 லட்சம் தேவை.
ஒரு லிட்டர் பதநீர் தோட்டங்களில் ரூ.10க்கு கிடைக்கும். மொத்த வியாபார கடைகளில் சுக்கு கிலோ ரூ255, மிளகு ரூ260, திப்பிலி ரூ650க்கு கிடைக்கும். பதநீர் போதிய அளவு கிடைக்காவிட்டால் கருப்பட்டி தயாரிக்கும் குன்னத்தூர், வேம்பாரை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், சிறுவலூர், வேலூர் மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டியை வாங்கி வந்து, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீரை ஊற்றி மீண்டும் காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு சுக்கு கருப்பட்டியாக தயாரிக்கலாம்.
சுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!! |
கருப்பட்டி தயாரிப்பு (Karupatti):
அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பாகு ஆனவுடன் அடுப்பை நிறுத்தி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும்.
அச்சுக் குழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும்.
10 கிலோ பனங் கருப்பட்டி கிடைக்கும். பின்னர் பேக்கிங் செய்து விற்கலாம்.
சுக்கு கருப்பட்டி தயாரிப்பு (Karupatti) :
பனங் கருப்பட்டி தயாரிப்பு (palm jaggery) முறையில் 70 அல்லது 80 லிட்டர் பதநீர் கொதிக்கும்போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிலி ஆகியபொடி கலவையை போட்டுக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும்.
மற்றவை பனங் கருப்பட்டி (palm jaggery) தயாரிப்பு போலவே.
பணங்கற்கண்டு தயாரிக்கும் (Karupatti) முறை:
100 லிட்டர் பனை பதநீரை கொப்பரையில் ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத்துக்கடியில் புதைக்க வேண்டும்.
40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும்.
100 லிட்டர் பதநீருக்கு 5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். கிலோ ரூ300 முதல் ரூ500 வரை விற்கலாம்.
விற்பனை வாய்ப்பு:
சுக்கு கருப்பட்டி தயாரிப்பு (palm jaggery) தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு கெடாது. சுக்கு கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100 கிராம், 200 கிராம் பாக்கெட்களில் தின்பண்டமாக விற்கலாம்.
தமிழகத்திலுள்ள சர்வோதய சங்கங்கள், கடலூர் பனை பொருள் தயாரிப்பு நிலையம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், முக்கிய விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சப்ளை குறைவாக இருப்பதால் கிராக்கி உள்ளது.
சுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |