சுயதொழில் – கேன் வாட்டர் தொழில் !!!

தண்ணீர் கேன் தொழில் செய்யலாம் வாங்க..!

வியாபாரத்தில் சக்கைபோடு போட வேண்டுமா ? அப்படினா அதற்கு கேன் வாட்டர் தொழில் தான் சிறந்தது. இந்த கேன் வாட்டர் பிஸினஸ் பலர் இயங்க முக்கிய காரணம் மக்களின் அதிக தேவையும் மற்றும் அதிக லாபம் பெறுவதினாலும் தான்.

எனவே கேன் வாட்டர் தொழில் வியாபாரத்தில் அதிக சந்தை வாய்ப்பு இருப்பதினால், அதிக லாபம் பெறலாம்.

இந்த கேன் வாட்டர் பிஸினஸ் தொடங்க குறைந்தபட்ச ரூபாய் பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த கேன் வாட்டர் பிஸினஸ் தொடங்கி நடத்தலாம்.

newசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சரி வாங்க கேன் வாட்டர் தொழில் எப்படி செய்யலாம் என்பதைப்பற்றி இப்போது நாம் காண்போம்.

கேன் வாட்டர் பிஸினஸ் – மூலப்பொருட்கள்:

இந்த கேன் வாட்டர் தொழில் தொடங்க தண்ணீர்தான் முக்கிய மூலப்பொருள்.

தண்ணீரை சுத்தம் செய்வதற்காக சில வகையான கெமிக்கல்ஸ் தேவை.

தண்ணீர் கேன் தொழில் – தேவைப்படும் இயந்திரங்கள்:

 1. மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் – சாண்ட் ஃபில்டர்,
 2. ஆக்டிக் கார்பன் ஃபில்டர்,
 3. மைக்ரான் ஃபில்டர்,
 4. ஆர்.ஓ.யூனிட்,
 5. தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க்,
 6. ஒஸநேட்டர்,
 7. புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும்.

இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.

கேன் வாட்டர் தொழில் – கட்டிட அமைப்பு:

இந்த கேன் வாட்டர் தொழில் தொடங்க கண்டிப்பாக 2,000 சதுர அடி கொண்ட கட்டிடம் தேவை.

அவற்றில் பலவிதமான பணிகளை செய்ய தனித்தனி அறைகளை பிரிக்க பட வேண்டும்.

தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.

மேலும் 21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.

கேன் வாட்டர் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்:

இந்த தயாரிப்பில் மொத்தம் 7 நிலைகள் உள்ளன.

கேன் வாட்டர் பிஸினஸ் – முதல் நிலை:

தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்ப வேண்டும்.

கேன் வாட்டர் பிஸினஸ் – இரண்டாவது நிலை:

இந்த சாண்ட் ஃபில்டர் (Sand Filter) இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.

newசுயதொழில் – கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு ..!

கேன் வாட்டர் பிஸினஸ் – மூன்றாவது நிலை:

மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும்.

இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.

கேன் வாட்டர் பிஸினஸ் – நான்காவது நிலை:

நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும்.

இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும்.

கேன் வாட்டர் தொழில் – ஐந்தாவது நிலை:

டேங்கில் உள்ள தண்ணீர் ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஐந்தாவது நிலை.

கேன் வாட்டர் தொழில் – ஆறாவது நிலை:

ஆறாவது நிலையில் அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அளிக்கப்படுகிறது.

கேன் வாட்டர் தொழில் – ஏழாவது நிலை:

இறுதியாக, சுத்தமான தண்ணீர் ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

கேன் வாட்டர் தொழில் – முக்கிய கட்டுப்பாடுகள்:

 • தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது.
 • கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை.
 • தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
 • கையில் உறை, வாயில் முகமூடியும் அணிந்து கொள்ள வேண்டும்.
 • இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
 • ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
 • தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 • இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
 • தண்ணீர் பேக் செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர்.
 • மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது. இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில்.
 • அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.
newசுயதொழில் – சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil