சலவை சோப்பு தயாரிப்பு முறை..!Soap Seivathu Eppadi in Tamil..!
சோப்பு தயாரித்தல் (Soap Seivathu Eppadi in Tamil) :- இன்றைய அவசர உலகத்தில், நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
எனவே புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சோப் தயாரிப்பு முறையில் (soap seivathu eppadi in tamil) அதிக லாபம் பெறலாம், சுயதொழில் தொடங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த சுயதொழிலாக விளங்குகிறது. அதுவும் வீட்டில் சலவை சோப்பு தயாரிக்கும் முறை என்பதால்
இவற்றின் மூலம் அதிக லாபம் பெறலாம்.
மூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை..! |
சரி வாங்க வீட்டில் துணி சோப்பு தயாரிக்கும் முறை பற்றி (soap seivathu eppadi in tamil) இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
துணி சோப்பு தயாரித்தல் முறை:
சோப்பு தயாரித்தல் – தேவையான பொருட்கள்:
- வாஷிங் சோடா – 12 கிலோ
- சிலரி ஆயில் – 20 கிலோ
- டினோபால் பவுடர் – 50 கிராம்
- தண்ணீர் – 2 லிட்டர்
- களிமண் பவுடர் – 5 கிலோ
- கால்சைட் (கல்மாவு) – 48 கிலோ
- சிலிகேட் – 5 கிலோ
- எஸ்டிபிபி – 5 கிலோ
- வாசனை திரவியம் சென்ட் – 200 மி.லி
- நீல நிற பவுடர் – 50 கிராம்
புதிதாக என்ன தொழில் செய்யலாம் – சிறு தொழில் பட்டியல்..! |
துணி சோப்பு தயாரிக்கும் செய்முறை (Soap Seivathu Eppadi in Tamil):
- வீட்டில் சலவை சோப்பு தயாரிக்கும் முறை – சோப்பு தயாரித்தல் முறையில் முதலில் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
- கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ,சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 லி ஆகியவற்றை கொட்ட வேண்டும்.
- 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும்.
- பின்பு எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும்.
- இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
சலவை சோப்பு தயாரித்தல் முறை- கட்டிட அமைப்பு:
2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50,000/-, மின் இணைப்பு 5 எச்பி ரூ.5,000/-, சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5,00,000/-, சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2,000/-, 10 கேன் ரூ.2,000/-, இதர பொருட்கள் ரூ.1000/- அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
துணி சோப்பு தயாரித்தல் முறை- உற்பத்தி செலவு:
சோப்பு தயாரித்தல் (soap seivathu eppadi in tamil) முறையில் ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம்.
ஒரு டன் சலவை சோப்பை தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப்பை தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.
துணி சோப்பு தயாரிக்கும் முறை – வருவாய்:
ஒரு டன் சோப்பை ரூ.30,000/- டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம்.
நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
துணி சோப்பு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் இடம்:
- சோடா – கோவை,
- சிலரி ஆயில் – புதுவை,
- டினோபால் பவுடர் – மும்பை,
- க்ளே – கேரளா,
- கால்சைட் – சேலம்,
- சிலிகேட் – கோவை,
- எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் – கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
துணி சோப்பு தயாரிக்கும் முறை – சந்தை வாய்ப்பு:
சோப்பு தயாரித்தல் (soap seivathu eppadi in tamil) முறையில் இந்த சோப்பை சந்தைகளில் விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம், மிகப்பெரிய கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அதிகமாக விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.
சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம் |
இது போன்ற பல வியாபாரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | என்ன தொழில் செய்யலாம்..! |