சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!

சுயதொழில்:-

சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு – பல நூற்றூண்டுகளாக ஜவுளி தொழில் கொடிகட்டி பறக்கிறது. நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நமது ஆயத்த ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை நமது ரெடிமேட் ஆடைகள் வாங்காத நாடுகளே உலகில் இல்லை.

ஆனால், அதிக வாய்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் இந்தத் துறையில் அதிகளவில் ரிஸ்க்கும் இருக்கின்றன. அந்த ரிஸ்க்குகளைத் தாண்டி, சமாளித்து நின்றுவிட்டால் போதும், நீங்களும் ஒரு தொழிலதிபராகி விடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

newவீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

சுயதொழில் – சந்தை வாய்ப்பு:

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு – தமிழகத்தில் பல நகரங்களில் ஜவுளித் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும் சென்னை, ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில் தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

ரெடிமேட் ஆடைகள் நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம் அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர் வாங்கி, அதை தயார் செய்தும் கொடுக்கலாம்.

இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இங்கு தயாராகும் ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில் தான், இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது.

ஆனால், உண்மை என்னவெனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

newமூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை..!

சுயதொழில் – மூலப் பொருட்கள்:

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு – ரெடிமேட் டிசைன் கடை துவங்க டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணி வகை மற்றும் தைப்பதற்கு நூல் ஆகியவை இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும்.

டெக்ஸ்டைல்ஸ் துறையில் கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

சுய தொழில் – இயந்திரங்கள்:

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு – ரெடிமேட் டிசைன் கடை துவங்க தேவையான இயந்திரங்களை (தையல் மெஷின்கள் மற்றும் கட்டிங் மெஷின்கள்) ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவை, சென்னை நகரங்களில் இருக்கிறார்கள்.

அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

சுயதொழில் – முதலீடு:

ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு – இந்த ரெடிமேட் டிசைன் கடை தொழில் துவங்குவதற்கான நிலம் மற்றும் கட்டிடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்து கொள்ளலாம்.இந்த தொழில் துவங்குவதற்கு மொத்தம் 6,00,00/- தேவைப்படும்.

சுயதொழில் – ஃபைனான்ஸ்:

ரெடிமேட் டிசைன் கடை தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சுய தொழில் – மானியம்:

இந்த தொழில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் வரை அரசு மானியம் கிடைக்கும்.

இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும்.

சுயதொழில் – தயாரிக்கும் முன்:

டையிங், பிளீச்சிங், பிரின்டிங் செய்யப்பட்ட காட்டன், சிந்தெடிக் துணிகளை வாங்கிச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

துணிகளின் தரம் சரியாக இருக்கிறதா? கலர் மங்கியிருக்கிறதா? அல்லது வேறு வகையில் சேதம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து ஆய்வு செய்த பின்பே தைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

காரணம், நமது தயாரிப்பில் டேமேஜ் இருக்கும் பட்சத்தில் அது மீண்டும் நம்மிடமே வந்து சேரும். இந்த இழப்பு வராமல் இருக்க வேண்டுமெனில், தரத்தில் கவனமாக இருப்பது அவசியத்திலும் அவசியம்!

newசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

images1

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2021