சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Advertisement

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் 

செங்கலுக்கு அடுத்தபடியாக இப்போது சிமெண்ட் செங்கல் தயாரிப்பு (ஹாலோபிளாக் கற்கள்) அதிகளவு கட்டிடக்கலைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த காரணமாக இப்போது ஹாலோபிளாக் தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே இந்த தொழிலில் அதிக லாபம் பெறலாம்.

சிறு தொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

தேவையான பொருட்கள்:

  1. ஜல்லி
  2. கிரஷர் மண் (பவுடர் போல் இல்லாமல், குருணை போல் இருக்க வேண்டும்)
  3. சிமென்ட் (ஓபிசி)
  4. தண்ணீர்

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு முறை:

சிமென்ட் 4 சட்டி (ஒரு மூட்டை), ஜல்லி 9 சட்டி, கிரஷர் மண் 6 சட்டி எடுக்க வேண்டும்.

தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும்.

மிக்ஸர் மெஷினை இயக்கி, அதில் சிமென்ட் ஒரு சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி, ஒரு வாளி தண்ணீர் ஆகியவற்றை வரிசையாக கொட்ட வேண்டும். மீண்டும் அதே அளவில் தொடர்ந்து கொட்ட வேண்டும்.

இவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும். அவற்றை டிராலியில் கொட்டி, டிராலியை ஹைட்ராலிக் மெஷினுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஹைட்ராலிக் மெஷின் நகரும் தன்மை உடையது. அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு, தரையில் பதிந்திருக்கும். அச்சுக்குள் கலவையை கொட்டி, அச்சில் உள்ள கலவையை ஏழெட்டு முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால், ஹாலோபிளாக் கட்டி உருவாகும்.

ஹாலோபிளாக் கட்டியை பிடித்துள்ள அச்சு, பிடியை விட்டு வெளியேறும். மெஷின் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து கொள்ளும்.

ஹைட்ராலிக் மெஷினில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும்.

ஹாலோபிளாக் கற்கள் (சிமெண்ட் செங்கல் தயாரிப்பு) 4 மணி நேரத்தில் காய்ந்து விடும். எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருந்து, பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.

பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.

சிறு தொழில் – ஊதுவத்தி தயாரிப்பது எப்படி ..?

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் –  தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:

ஜல்லி கற்கள், கிரஷர் மண், சிமென்ட் ஆகியவை எளிதில் கிடைக்கும். குறைந்த தூரத்துக்குள் உள்ள இடங்களில் இருந்து வாங்கினால் லாரி போக்குவரத்து செலவு குறையும்.

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் – வருவாய்:

4 இஞ்ச் ஹாலோபிளாக் கல் (13 கிலோ கொண்டது) குறைந்தபட்சம் ரூ.18க்கும், 6 இஞ்ச் கல் (19 கிலோ) ரூ.23க்கும், 8 இஞ்ச் கல் (25 கிலோ) ரூ.27க்கும் விற்கப்படுகிறது.

வருவாய் ரூ.4.3 லட்சம். லாபம் ரூ.39 ஆயிரம். சிமென்ட், ஜல்லி, கிரஷர் மண் விலை ஏற்றத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். சிமென்ட் காலி சாக்குகள் மூலம் வருவாய் தலா ரூ.2 வீதம் 325க்கு ரூ.650. மாதம் சராசரியாக ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும்.

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் – முதலீடு:

இந்த தொழிலை துவங்குவதற்கு முதலீடாக 50,000/- போட வேண்டியதாக இருக்கும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் – அரசு வழங்கும் மானியம்:

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் – இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்:

இந்த ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு தொழில் – கற்களின் அளவுகள்:

ஹாலோபிளாக் கற்கள் பொதுவாக மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச், 8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 சிறந்த சிறு தொழில் பட்டியல்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement