பாக்குமட்டை தட்டு தயாரிப்பு அதிக வருமானம்..!
சுயதொழில் செய்ய நினைப்பவர்களுக்கு சிறந்த தொழிலாக பாக்குமட்டை பிளேட் தயாரிப்பு சிறந்து விளங்குகிறது. இதை செய்து விற்பனையில் அதிக வருமானம் பெற இயலும், அதுமட்டுமின்றி இன்று தமிழக அரசு தற்போது 2019 ஆண்டுகளில் இருந்து பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால், இவற்றின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும் எனவே தயக்கம் இன்றி இந்த தொழிலை துவங்கலாம்.
இந்த தொழில் சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்காதவை என்பதால் சந்தையில் அதிகம் வரவேற்கப்படுகிறது.
![]() |
கட்டிட அமைப்பு:
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு – இந்த தொழில் துவங்குவதற்கு 10-க்கு 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய அறை இருந்தால் போதும். ஆண், பெண் இருவரும் செய்யக்கூடிய தொழிலாக இது விளங்குகிறது.
உற்பத்தி பொருட்கள்:
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு – உற்பத்தி பொருட்கள் மிக எளிதில் நமக்கு கிடைக்க கூடியவை தான், அதாவது மூல பொருட்களான பாக்குமட்டை, ரூ 02/- முதல் ரூ.04/- வரை தான் இருக்கும். இவற்றை மொத்தமாக வாங்கி கொண்டால் விலை குறைத்து கூட வாங்கி கொள்ளலாம்.
கிடைக்கும் இடம்:
சேலம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், கேரளா மற்றும் கர்நாடக போன்ற இடங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் கிடைக்கும்.
![]() |
இயந்திரங்கள்:
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு – இயந்திரங்களை பொறுத்த வரை பல வகைகள் உள்ளன. அவற்றில் ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிசின், பெடல் ஆப்ரேட்டிங் மிசின் மற்றும் ஆட்டோமேட்டிக் மிசின் சிறந்ததாக விளங்குகிறது.
ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிசின் – 20,000/- முதல் 30,000/- ஆயிரம் வரை கிடைக்கும்.
ஆட்டோமேட்டிக் மிசின் பொறுத்தவரை 50,000/- முதல் 2,00,000/- வரை கிடைக்கும்.
இருப்பினும் குறைந்த விலையாக இருக்கும் ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிஷினை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
தயாரிக்கும் முறை:
பாக்குமட்டையில் தட்டு தயாரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை, மிக எளிதில் செய்து விட முடியும்.
முதலில் பாக்குமட்டையை 30 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
30 நிமிடம் கழித்த பிறகு வெயிலில் சிறிது நேரம் வரை காய வைத்து எடுத்து விட்டோம் என்றால் மட்டை, தட்டு செய்வதற்கு தயாராகிவிடும்.
இப்போது மட்டை எடுத்து கொள்ளவும் அவற்றை ஹேண்ட் ஆப்ரேட்டிங் மிஷினில் வைத்து ஒரு பிரஷ் செய்தோம் என்றால் பாக்குமட்டை பிளேட் தயாராகி விடும்.
நமக்கு தேவையான அளவிற்கு தட்டின் அளவை மாற்றி கொள்ளலாம். அதாவது 4 இன்ஜி முதல் 12 இன்ஜி வரை அளவை மாற்றி செய்ய முடியும். அதாவது சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை செய்து விற்பனை செய்ய முடியும்.
சந்தை வாய்ப்பு:
இவற்றை கோயில்களிலும், திருவிழாக்களிலும், அனைத்து வகை விசேஷங்களிலும், திருமண மண்டபத்திலும், கையேந்திபவன் போன்ற இடங்களில் அதிகளவு விற்பனை செய்யலாம்.
![]() |
பாக்குமட்டை தட்டு தயாரிப்பு – வருமானம்:
ஒரு தட்டு ஒரு ரூபாய் என்று விற்பனை செய்தாலும், 50,000/- தட்டுகளை தயார் செய்து விற்பனை செய்தோம் என்றால் கண்டிப்பாக 50,000/- வரை வருமானம் பெற இயலும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | புதிய தொழில் பட்டியல் 2021 |