பெனாயில் தயாரிப்பது எப்படி ..!
பெனாயில் தயாரிப்பது எப்படி: வீட்டில் இருந்த படியே தினமும் வருமானம் பெற வேண்டுமா? அப்படி என்றால் பினாயில் தயாரிக்கும் முறையை செய்யலாமே. வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில் அதிக இலாபம் பெற வேண்டும் என்றால் பெனாயில் தயாரிப்பு மிகவும் சிறந்த தொழிலாகும். இவற்றை செய்வதற்கு வேலையாட்கள் ஒன்றும் தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும். ஆண்கள் பெண்கள் இருவருமே செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாகும்.
சரி வாங்க பெனாயில் தயாரிப்பது எப்படி என்பதையும், அதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.
லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிப்பு முறை – சுயதொழில்!!! |
பெனாயில் தயாரிப்பது எப்படி – தேவைப்படும் மூலப்பொருட்கள்:-
- பெனாயில் காம்பவுண்ட் – 1 லிட்டர்
- தண்ணீர் – 20 லிட்டர்
- கலர் – சிறிதளவு
- செண்ட் – சிறிதளவு
பெனாயில் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருள் எதுவென்றால் பெனாயில் காம்பவுண்ட் தான், இந்த கெமிக்கல், அனைத்து கெமிக்கல்ஸ் கடைகளிலும் மிக எளிதில் கிடைக்கும்.
மொத்தமாக இந்த கெமிக்கலை வாங்கினோம் என்றால் விலை குறைத்து கூட வாங்கி கொள்ளலாம்.
பினாயில் தயாரிப்பது எப்படி வாங்க தெரிந்து கொள்வோம் ..!
பினாயில் தயாரிக்கும் முறை:-
ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்து கொள்ளவும்.
அவற்றில் 20 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
பின்பு பெனாயில் காம்பவுண்ட் கெமிக்கலை ஒரு லிட்டர் எடுத்து கொண்டு இந்த தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
பிறகு இந்த கலவையை ஒரு குச்சியை கொண்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை 1/2 பாட்டில் கலந்து கொள்ளவும்.
பிறகு இந்த கலவையில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கலர் லியூட் அல்லது கலர் பொடியை சேர்த்து திரும்பவும் இந்த கலவையை நன்றாக ஒரு குச்சியை விட்டு கலந்து விடவும்.
பின்பு இந்த கலவையை ஒரு துணியை கொண்டு வடிகட்டி தனியாக வைத்து மூடிவிடவும்.
அவ்வளவுதான் பெனாயில் தயாராகிவிட்டது.
இந்த பெனாயிலை பேக்கிங் செய்து தினமும் அனைத்து மல்லிகை கடைகளிலும் விற்பனை செய்யலாம், அதுமட்டும் இன்றி உங்களுக்கு தெரிந்தவர்களை வாடிக்கையாளர்களாக பிடித்து கொண்டு அவர்களுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யலாம்.
பினாயில் தயாரிக்கும் முறை – முக்கிய குறிப்பு:
பெனாயில் தயாரிக்கும் போது சுத்தமான தண்ணீரில் தான் தயார் செய்யவேண்டும். குறிப்பாக உப்பு தண்ணீரில் பெனாயில் தயாரிக்க கூடாது.
பினாயில் தயாரிப்பு – முதலீடு:
பெனாயில் காம்பவுண்ட் ஒரு லிட்டர் வாங்குவதற்கு ஆகும் செலவு 130/- ரூபாய், நறுமணத்திற்காக பயன்படுத்தும் செண்டின் விலை 35/- ரூபாய், பின்பு நிறத்திற்காக பயன்படுத்தும் புட் கலரின் விலை 5/- ரூபாய், பெனாயிலை பேக்கிங் செய்வதற்கு ஒரு பாட்டில் விலை 5/- ரூபாய். எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை பெனாயில் தயாரிப்பதற்கு மொத்தம் 175 ரூபாய் செலவு ஆகும்.
இருப்பினும் ஒரு நாளைக்கு மூன்று முறை என்று 63 லிட்டர் பெனாயில் தயாரிக்க முடியும். மூலப்பொருட்களின் விலை 500/- மற்றும் பாட்டில் விலைக்கு வாங்கும் செலவு 500/- ரூபாய் அனைத்து செலவையும் சேர்த்தால் 1000/- ரூபாய் தான் இந்த தொழில் தூங்குவதற்கு தேவைப்படும்.
இந்த பெனாயிலை நாம் கடைகளுக்கு சென்று விற்பனை செய்கின்றோம் என்றால் ஒரு லிட்டர் பெனாயிலின் விலை ரூபாய் 20/- என்று விற்பனை செய்யலாம்.
அதே போல் நேரடியாக நாம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றோம் என்றால் 30/- ரூபாய்க்கு தாராளமாக விற்பனை செய்ய முடியும்.
எனவே பினாயில் தயாரிப்பு என்பது மிக அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளது.
சுயதொழில் – விபூதி தயாரிப்பு..! குறைந்த முதலீடு அதிக லாபம் |
பெனாயில் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா இந்த தயாரிப்பு தொழிலை செய்து நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |