வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..!

Updated On: December 8, 2023 10:29 AM
Follow Us:
சர்பத் செய்முறை
---Advertisement---
Advertisement

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..!

சர்பத் செய்முறை: மிக குறைந்த முதலீடு செய்து இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பெறக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பத் விற்பனை செய்வது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒரு மரத்தடி, சின்ன டேபிள் மற்றும் ஐஸ் பாக்ஸ் இருந்தாலே போதும்.

ஆனால் ஒரே மாதிரி சர்பத் செய்து விற்பனை செய்யாமல், பல விதமாக அதாவது மக்களுக்கு பிடித்தவாறு பலவிதமாக செய்து விற்பனை செய்தால் இந்த தொழிலில் அதிக இலாபம் பெறமுடியும். சரி வாருங்கள் இவற்றில் பலவிதமான சர்பத் செய்வது எவ்வாறு  என்று காண்போம்.

newசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சோற்றுக் கற்றாழை சர்பத் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. சோற்றுக் கற்றாழை ஜெல்லி – 50 கிராம்
  2. நன்னாரி சர்பத் – தேவையான அளவு
  3. ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
  4. எலுமிச்சை சாறு – தேவையான அளவு

சர்பத் செய்முறை:

இந்த சோற்றுக் கற்றாழை பொதுவாக நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை பொருள், இதனை 50 கிராம் அளவு எடுத்து கொண்டு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொண்டு, அவற்றில் தேவையான அளவு நன்னாரி சர்பத், ஐஸ் கட்டிகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்தால் சோற்றுக் கற்றாழை சர்பத் தயார்.

சோற்று கற்றாழை நன்மைகள்:

கண் நோய்களை குணப்படுத்தும் வல்லமை பெற்றது.

செரிமான பிரச்சனைகளை நீக்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் தன்மைவாய்ந்தது.

உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை சர்பத் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

கற்றாழை மிகவும் குளிர்ச்சி வாய்ந்த தாவரம் என்பதால் தினமும் இந்த சர்பத்தை அருந்திவர உடல் சூட்டை தணிக்கும்.

தர்பூசணி சர்பத் செய்முறை:

  1. தர்பூசணி – 50 கிராம்
  2. நன்னாரி சர்பத் – தேவையான அளவு
  3. ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
  4. எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை:

தர்பூசணி 50 கிராம் அளவு எடுத்து கொண்டு மிக்ஸ்யில் கூழ் மாதிரி நன்கு அடித்து கொண்டு, இதில் தேவையான அளவு நன்னரி சர்பத், ஐஸ், எலும்பிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.

தர்பூசணி நன்மைகள்:

உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது.
இதிலுள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

எடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிக்கலாம். ஆண்மை குறைபாடுக்கு மிக சிறந்தது.

புதினா நன்னாரி சர்பத் செய்முறை:

தேவையான பொருட்கள்:

  1. நன்னாரி சர்பத் – கால் கப்,
  2. சர்க்கரை – 2 டீஸ்பூன்,
  3. எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்,
  4. புதினா இலை – 10.

தயாரிக்கும் முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் 1 கப் தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். புதினா இலையை ஆய்ந்து கழுவி, பொடியாக நறுக்கி, சர்பத்தின் மேலே தூவி பறிமாறவும். புதினா மணத்துடன் புத்துணர்ச்சி தரும் இந்த நன்னாரி சர்பத். தேவையென்றால் ஐஸ்கியூப்கள் சேர்க்கலாம்.

புதினாவின் மருத்துவ நன்மைகள்:

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வு தொல்லையை அகற்றுகின்றது.

newசுயதொழில் – பனை கருப்பட்டி தயாரிப்பு ..!

வெஜிடேபிள் மோர்:

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளரிக்காய் – 1,
  2. சிறிது கெட்டி மோர் – 1 டம்ளர்,
  3. உப்பு – தேவையான அளவு,
  4. நறுக்கிய மல்லித்தழை – 1 டீஸ்பூன்,
  5. பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் – 1 டீஸ்பூன்,
  6. துருவிய இஞ்சி – கால் டீஸ்பூன்.

தயாரிக்கும் முறை:

வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பிறகு, மோரில் உப்பு, நறுக்கிய மல்லித்தழை, துருவிய இஞ்சி, அரைத்த வெள்ளரி சேர்த்து கலந்து பறிமாறவும்.

இது உடலுக்கு குளிர்ச்சி தரும். இப்போது வெள்ளரி சீஸன் என்பதால், அடிக்கடி இதனை செய்து, வீட்டில் அனைவரும் பருகலாம்.

லஸ்ஸி:

நான்கு கப் கெட்டி தயிரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட வேண்டும், பின்பு அவற்றில் 8 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, பின்பு இவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து, நுரை வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும். அவ்வளவுதான் லஸ்ஸி தயார்.

நன்னாரி வேரின் பயன்கள்:

உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படுகிறது.

உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை திடமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலி, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

newசுயதொழில் – பாப்கார்ன் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!

morning food business in tamil

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்