வீட்டிலேயே இருந்து குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் சிறந்த தொழில்…?

குறைந்த முதலீடு அதிக லாபம் 

குறைந்த முதலீடு அதிக லாபம் 

வணக்கம் நண்பர்களே. உங்களுக்கு பயனுள்ள தகவலாக இந்த பதிவு இருக்கும். அதிக பெண்களுக்கு இருக்கும் ஆசை என்னவென்றால் சுயதொழில் செய்வதே. அனைத்து பெண்களும் சுயதொழில் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து பல பெண்கள் அவர்கள் வாழ்வில் முன்னேறியுள்ளனர். சுயதொழில் எப்படி தொடங்குவது..? அதற்கு அதிகம் பணம் செலவாகுமா..? சுயதொழில் செய்தால் லாபம் கிடைக்குமா..? என்று பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் எப்படி தொடங்குவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 

வீட்டிலிருந்து எப்படி சுயதொழில் செய்வது?

வீட்டில் இருந்தே சுயதொழில் தொடங்குவதற்கு பல வழிகள் உள்ளன. இந்த நாட்டில் எத்தனையோ சுயதொழில்கள் உள்ளன. இந்த சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பெண்களாகவே இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் செய்யாத வேலைகளே இல்லை. இன்றைய நிலையில் இருக்கும் அனைத்து தொழில்களிலும் பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விண்வெளியில் தொடங்கி ராணுவம், விமானம், இரயில் போன்ற அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.

இப்படி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களால் அவர்களின் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவர்களால் வெளியே சென்று அவர்களின் பணியை தொடர முடியவில்லை. அந்த நிலையில் சுயதொழில் மற்றும் குடிசை தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தொழில் தொடங்குவது?

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தொழில் தொடங்குவது என்று யோசிக்கிறீர்களா..? நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுயமாக தொழில் தொடங்கலாம். அதற்கான சில டிப்ஸ் இதோ…

நம் வீட்டில் இருக்கும் மளிகை பொருட்களை வைத்து தொழில் தொடங்கலாம். தேவையான பொருட்களை மொத்தமாக சந்தைகளில்(Market) வாங்கி அவற்றை கிலோ கிராம் அளவில் பாக்கெட் செய்து  விற்கலாம். கடுகு, மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம் போன்ற மளிகை பொருட்களை வைத்து அவற்றை கிலோ அல்லது கிராம் கணக்கில் பாக்கெட் செய்து விற்பதன் மூலம் லாபம் பெறலாம். அதேபோல், கடலை, பருப்பு வகைகள் மற்றும் மிளகாய் தூள் போன்ற தூள் வகைகளை பாக்கெட் செய்து விற்பதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

பாக்கெட்

நீங்கள் கிலோ அல்லது கிராம் அளவுள்ள பாக்கெட் கவர்களை வாங்கவேண்டும்.

sealing machine

பின்பு சீல் இயந்திரம் (sealing machine). இதில் நீங்கள் போட்ட பாக்கெட்களை எடுத்து இந்த இயந்திரத்தில் வைத்து ஓட்டினால் போதும் வேலை முடிந்தது.

பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்

செய்முறை:

கடுகு – 40 கிராம்.

சீரகம் – 40 கிராம்.

வெந்தயம் – 40 கிராம்.

ஏலக்காய் –  20 கிராம்.

நிலக்கடலை –  20 கிராம்.

சோம்பு – 40 கிராம்.

பொட்டுக்கடலை – 20 கிராம்.

இதுபோலவே நீங்கள் சந்தையில் வாங்கிய பொருட்களை கிராம் கணக்கில் பாக்கெட் செய்து கடைகளில் விற்கலாம். இதுபோன்று பாக்கெட் செய்து விற்பதன் மூலம் லாபம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022